சிங்கிள் சார்ஜில் சென்னை-மதுரை போயிரலாம்! விலை இவ்ளோதானா! டாடாவுக்கு செக் வைக்க வரும் புது எலெக்ட்ரிக் கார்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று, எம்ஜி மோட்டார் (MG Motor). தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. அவை எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) ஆகியவை ஆகும். இந்த வரிசையில் இந்திய சந்தைக்கான எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 3வது எலெக்ட்ரிக் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அது எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) ஆகும். இந்த காரை இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் சியூவி (India's First Intelligent CUV) என எம்ஜி மோட்டார் நிறுவனம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார், வரும் செப்டம்பர் 11ம் தேதி (September 11), பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அன்றைய தினம் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார் பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரிய வந்து விடும்.
ஆனால் விலை (Price) அறிவிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். ஒன்று அன்றைய தினமே விலை அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அல்லது பொது பார்வைக்கு மட்டும் அறிமுகம் செய்து விட்டு, ஒரு சில வாரங்கள் கழித்து அதிகாரப்பூர்வமாக விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

அனேகமாக இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரில், 1 அல்லது 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை 50.6 kWh மற்றும் 37.9 kWh ஆகியவை ஆகும். இதில் ஒரு பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம். அல்லது 2 பேட்டரி ஆப்ஷன்களுமே கூட வழங்கப்படலாம். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு நாம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.
இதில், 50.6 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 460 கிலோ மீட்டர் எனவும், 37.9 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 360 கிலோ மீட்டர்கள் எனவும் எம்ஜி மோட்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற டிரைவிங் ரேஞ்ச் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 15-20 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி ஏற்படலாம் என நாங்கள் கருதுகிறோம். இதுதவிர மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி (Mahindra XUV400 EV) எலெக்ட்ரிக் காருக்கும் விற்பனையில் நெருக்கடி ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








