கிரெட்டா, நெக்ஸான் எல்லாம் தோத்துப்போகும்! பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த எம்ஜி!

எம்ஜி மோட்டார் நிறுவனம் சர்வதேச மார்க்கெட்டில் தனது புதிய இசட்எஸ் என்ற எஸ்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது. வரும் 26ம் தேதி இந்த அறிமுகம் நடக்க உள்ளது. அறிமுகம் தேதி நெருங்கும் நிலையில் இந்த காரின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் சில முக்கியமான தகவல்கள் மற்றும் காரில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்கள் உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி இந்த கார் முதலில் ஆஸ்திரேலியாவில் தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி அதன் பிறகு மெல்ல மெல்ல இது மற்ற உலக நாடுகளுக்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்திய மார்க்கெட்டிற்கும் இந்த கார் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

mg zs suv

ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் இந்த காரை காட்சிப்படுத்தியவுடன் புக் செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் டெலிவரி குறித்த விபரங்கள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிறுவனம் இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வமான டீசர் ஒன்றை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

இதில் இந்த காரின் முன் பக்கம் அக்ரஸிவான லுக் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. மேலும் இதில் புரொஜெக்டர் ஹெட் லைட் செட்டப் வழங்கப்பட்டுள்ளன. இதில் எல்இடி டிஆர்எல்களும் பொருத்தப்பட்டுள்ளது.பானெட் பகுதி பெரிதாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் லோகோ ஒளிர்கிறது. இந்த காரின் முன் பகுதியில் ஓவல் வடிவ கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது.

mg zs suv

இந்த கிரில் பகுதி தேன்கூடு பேட்டனில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆடி மாடல்களில் இப்படியான கிரில் பகுதி தான் வழங்கப்படுகிறது. பெரிய தகவல்கள் எதுவும் இந்த டீசலில் வெளியாகவில்லை. ஆனால் ஆல்டர் செய்யப்பட்ட வீல் ஆர்ச்கள் மற்றும் புதிய வடிவமைப்பு கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது ஒரு அளவுக்கு தெரிகிறது.

இந்த காரின் பின்பக்கம் எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளன. புதிய டெயில் லைட் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி நிறுவனம் இந்த இசட்எஸ் எஸ்யூவி பெட்ரோல் ஹைபிரிட் காராக விற்பனைக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. குறைந்தபட்சம் சர்வதேச மார்க்கெட்டில் இந்த இன்ஜின் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mg zs suv

இந்தியாவிற்கு வரும்போது இந்த கார் எப்படியான இன்ஜின் விற்பனைக்கு வரும் என்ற தகவல் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவிற்கு இந்த கார் வரும்போது முழுமையாக பெட்ரோல் அல்லது டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

இந்த கார் இந்தியாவிற்கு வரும்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் இதன் விலை அதிகமாக இருக்கும். இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பட்சத்தில் இதன் விலை குறைவாக இருக்கும். போட்டி நிறுவனங்களின் காருக்கு இணையான விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும். இதனால் இதன் விற்பனையும் அதிகரிக்கும் போட்டியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

எம்ஜி நிறுவனம் ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது காரை விற்பனை செய்து வரும் நிலையில், ப்ரீமியம் ரக எஸ்யூவி இசட் எஸ் என்ற காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனை செய்து வருகிறது. இதன் கம்பஷன் இன்ஜின் வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தற்போது சர்வதேச மார்க்கெட்டில் இந்த கார் அப்டேட்டாகி உள்ளது இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மக்கள் தற்போது எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்பி வருவதால் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகும் பட்சத்தில் இதுதான் விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேநேரம் இந்த காரின் பாதுகாப்பு மற்றும் விலை குறித்த விபரங்கள் வெளியாகும் போது தான் மக்கள் மத்தியில் இந்த காரை வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 13:19 [IST]
English summary
Mg zs suv teased ahead of august 26 debut
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X