அதிகம் மைலேஜ் தரும் மிஷ்லினின் புதிய டயர் அறிமுகம்.. இவ்ளோ ரூபாயை மிச்சப்படுத்த முடியுமா?
பாதுகாப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கும் இந்தியர்கள்தான் இப்போதும் அதிக மைலேஜிற்கு முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். நம்ம ஆட்களின் நீண்ட கால முக்கியத்துவமாக அதிக மைலேஜ் இருந்து வருகின்றது. இந்தியர்களின் இந்த அவசியத்தை உணர்ந்தே வாகன உற்பத்தியாளர்கள் அதிகம் மைலேஜை வழங்கும் கார்களை அதிகளவில் நாட்டில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். இதேபோல், டயர் உற்பத்தியாளர்களும் இந்தியர்களின் அதிக மைலேஜ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையிலான டயர்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில், உலக புகழ்பெற்ற டயர் உற்பத்தி நிறுவனமான மிஷ்லின் ஓர் சூப்பரான மைலேஜை வழங்கும் புதிய டயரை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. இந்த டயரானது வாகனத்தின் மைலேஜை திறனை அதிகரிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

மிஷ்லின் எக்ஸ் மல்டி எனெர்ஜி இசட் பிளஸ் (X multi-energy Z plus) எனும் பெயரிலேயே அது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் வர்த்த வாகனங்களுக்கான டயர் ஆகும். குறிப்பாக, டிரக் மற்றும் பேருந்துகளுக்கானது என கூறப்படுகின்றது. இவற்றின் மைலேஜ் திறனை வழங்கும் விதமாக இந்த டயர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற வண்ணம் இந்த டயரை தயார் செய்திருப்பதாக மிஷ்லின் கூறியிருக்கின்றது. கரடு-முரடான பாதை மற்றும் அதிக பாரம் என அனைத்தையும் சமாளிக்கும் என்பதையே மிஷ்லின் கூறியுள்ளது. குறிப்பாக, மிக அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்ற வகையிலேயே இந்த டயரை அது தயார் செய்திருக்கின்றது.
வாடகை வாகனங்களை இயங்கி வருபவர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இது ஓர் ட்யூப்லெஸ் டயர் ஆகும். 295/80R22.5 என்கிற அளவிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதுதவிர, கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கின்ற வகையிலேயே இந்த டயர் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
8 டன் வரை இது மாசை குறைக்குமாம். மிக குறைந்தபட்ச ரோலிங் ரெசிஸ்டன்ஸ் திறனைக் கொண்டதாகவும் அவர்கள் இந்த டயரை வடிவமைத்திருக்கின்றனர். இதுவே சுமார் 15 சதவீதம் வரை எரிபொருளை சிக்கனப்படுத்த உதவும் என கூறப்படுகின்றது. இந்த டயர் தற்போது இந்தியாவின் அனைத்து மிஷ்லின் ஷோரூம்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.
டயர்கள் வாகன இயக்கத்தில் மிகப் பெரிய அளவிலான பங்கினை வகிக்கின்றன. மிக சிறந்த இழுவை திறனைப் பெறுவதற்கும், பாதுகாப்பான பிரேக்கிங்கைப் பெறுவதிலும் டயர்கள் அதன் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மிக சிறந்த இழுவை திறன் மிக சிறந்த மைலேஜ் திறனுக்கு வழி வகுக்கும். இதேபோல், மிக சிறந்த பிரேக்கிங் வசதியைப் பெறுவதனால் பாதுகாப்பான பயண அனுபவத்தைப் பெற முடியும்.
இத்தகைய டயர்கள் தற்போது பஞ்சமின்றி சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே தற்போது கூடுதல் அட்வான்ஸ்டு திறன்களுடன் புதிய மிஷ்லின் எக்ஸ் மல்டி எனெர்ஜி இசட் பிளஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் பயன்பாட்டினால் ஆண்டு ஒன்றிற்கே ரூ. 3 லட்சம் வரை வர்த்தக வாகன ஓட்டுனர்களால் மிச்சப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் மிஷ்லினும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்திற்குமான டயர்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டிரக் மற்றும் பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கும் டயர்களின் பிரிவில் புதிய டயர் மாடலை மிஷ்லின் இணைத்திருக்கின்றது. இதற்கு கனரக வாகன உரிமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








