ஹூண்டாய், டாடா காரை எல்லாம் இந்த விஷயத்தில் யாரும் நம்புறது இல்ல! மஹிந்திரா கார்களை தான் எல்லாரும் வாங்குறாங்க
மஹிந்திரா ஸ்கார்பியோ, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்டவை அடங்கிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை இந்தியாவில் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும், மிட்-சைஸ் எஸ்யூவி கார்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் கிடைக்கின்றன. அதில் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த வகை எஸ்யூவி கார்கள் 4.4 மீட்டரில் இருந்து 4.7 மீட்டர் வரையிலான நீளம் கொண்டவையாக இருக்கின்றன.

இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 10 மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் அதிக பேரால் வாங்கப்படுபவையாக இருப்பது மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். மார்க்கெட்டில் ஸ்கார்பியோ கார்கள் நீண்ட காலமாக, கிட்டத்தட்ட 20 வருடங்களாக விற்பனையில் இருப்பது நமக்கு தெரியும். ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ-என் என 2 விதமான வெர்சன்களில் ஸ்கார்பியோ காரை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 14,807 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2023 ஏப்ரலில் வெறும் 9,617 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் 5,190 ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஏப்ரல் மாதத்திலும் இந்தியாவில் அதிகம் விற்பனையான மிட்-சைஸ் எஸ்யூவி காராக ஸ்கார்பியோ தான் இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான மொத்த மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை 28,027 ஆகும். இதில் ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே 14,807 ஆக பதிவாகி உள்ளது. அதாவது, இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி காரை வாங்க நினைக்கும் கஸ்டமர்களில் 2இல் ஒருவரது சாய்ஸ் மஹிந்திரா ஸ்கார்பியோவாக உள்ளது. இந்த வரிசையில் 2வது இடத்திலும் மஹிந்திராவின் மற்றொரு மிட்-சைஸ் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700 உள்ளது.
ஆனால், ஸ்கார்பியோ கார்களில் பாதி கூட எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனையாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 6,134 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஏப்ரலில் 4,757 எக்ஸ்யூவி700 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை ஆனது 28.95% அதிகரித்துள்ளது.

இந்த வரிசையில் 3வது இடத்தில், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 1,813 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஏப்ரலில் இவற்றின் விற்பனை எண்ணிக்கை 3,103 யூனிட்களாக பதிவாகி இருந்தது. இந்த வரிசையில், 4வது மற்றும் 5வது இடங்களில் டாடா ஹெரியர் மற்றும் டாடா சஃபாரி கார்கள் உள்ளன.
இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,746 மற்றும் 1,716 ஆகும். இவை இரண்டும் 2023 ஏப்ரலில் இதனை காட்டிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹூண்டாய் அல்கஸார் இந்த வரிசையில் 1,219 யூனிட்களின் விற்பனை உடன் 6வது இடத்தில் உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 4 இடங்களில் முறையே ஜீப் காம்பஸ் (282), ஹூண்டாய் டக்ஸன் (201), ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (108) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் (1) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் காரான சி5 ஏர்கிராஸ் கடந்த மாதத்தில் வெறும் 1 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பது நிச்சயமாக நம்மைபோல் சிட்ரோனுக்கும் ஆச்சிரியமாக இருக்கும். மறுப்பக்கம், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் அசூர வளர்ச்சி கண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









