ஹூண்டாயை யாராலும் நேருக்கு நேர் சமாளிக்க முடியல!! இந்த ஒரு கார் மட்டும் இல்லைனா...

அளவில் போதுமான அளவிற்கு பெரியதாக இருப்பதால், மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை வாங்க நிறைய பேர் விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதன்படி, ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. அதேநேரம், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனையும் ஓரளவிற்கு பிக்-அப் ஆக துவங்கியுள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

4.1 மீட்டரில் இருந்து 4.4 மீட்டருக்குள் நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த வகை கார்களில் அதிகம் விற்பனையாகுபவை என்று பார்த்தால், அது ஹூண்டாய் கிரெட்டா ஆகும். இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஹூண்டாய் காராக கிரெட்டா விளங்குகிறது. இது கடந்த அக்டோபர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

mid-size suv cars sales report

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 497 ஆகும். ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 13 ஆயிரத்து 77 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், கிரெட்டா காரின் விற்பனை 34% அதிகரித்துள்ளது.

கிரெட்டாவுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி காராக 2வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. மார்க்கெட்டில் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என 2 விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டும் மொத்தமாக கடந்த அக்டோபர் மாதத்தில் 15,677 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

mid-size suv cars sales report

ஆனால், 2023 அக்டோபரில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 578 ஆக பதிவாகி இருந்தது. இந்த வரிசையில் 3வது இடத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா 14 ஆயிரத்து 83 கார்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 அக்டோபரில் வெறும் 10 ஆயிரத்து 834 கிராண்ட் விட்டாரா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.

மீண்டும் மற்றொரு மஹிந்திரா மிட்-சைஸ் எஸ்யூவி காராக 4வது இடத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 உள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்து 435 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 கார்களின் எண்ணிக்கை 9,297 ஆகும். இந்த வகையில் பார்த்தால், எக்ஸ்யூவி700 கார்களின் விற்பனை எண்ணிக்கை 12% அதிகரித்துள்ளது.

mid-size suv cars sales report

கியா செல்டோஸ் இந்த வரிசையில் 5வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் 6,365 செல்டோஸ் கார்களை கியா விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 அக்டோபரில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 12 ஆயிரத்துக்கும் அதிகமான கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், செல்டோஸ் கார்கள் விற்பனை ஆனது 49% குறைந்துள்ளது.

இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே டொயோட்டா ஹைரைடர் மற்றும் டாடா கர்வ் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,449 மற்றும் 5,351 ஆகும். இதில், டாடா கர்வ் ஆனது புத்தம் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். 8வது இடத்தில் 2,213 யூனிட்கள் விற்பனை உடன் ஸ்கோடா குஷாக் உள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் ஹூண்டாய் அல்கஸார் (2,204) மற்றும் டாடா சஃபாரி (2,086) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 லிஸ்ட்டில் சில மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் இல்லை. அதாவது, அவற்றின் விற்பனை எண்ணிக்கை இதனை காட்டிலும் குறைவாகும். ஒருபக்கம், ஹூண்டாய் கிரெட்டா என்கிற கொரியன் ஸ்டைல் எஸ்யூவி காரின் விற்பனை அதிகரித்துவரும் நிலையில், மறுப்பக்கம் மற்றொரு கொரியன் எஸ்யூவி காரான கியா செல்டோஸின் விற்பனை வெகுவாக குறைந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 23:59 [IST]
English summary
Mid size suv cars sales report 2024 october check all details here
மேலும்... #car sales #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X