பேரதிர்ச்சி... விடைபெறும் மினி கார்.. 17 வருஷ சாம்ராஜ்யத்திற்கு முற்று புள்ளி வச்சுட்டாங்களா!!

உலக புகழ்பெற்ற சொகுசு மற்றும் பிரீமியம் தர கார் உற்பத்தி நிறுவனங்களில் மினி (Mini)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனமே அதன் புகழ் பெற்ற கார் மாடல் ஒன்றின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளப்மேன் (Clubman) கார் மாடலின் உற்பத்தியையே அது நிறுத்த இருக்கின்றது.

இந்த கார் மாடலின் உற்பத்தி சுமார் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதனை நிறுத்திக் கொள்ள மினி முடிவெடுத்து இருக்கின்றது. மினி நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு கிளப்மேன் கார் பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

Mini cooper s clubman

புதுமுக கார் மாடல் ஒன்றிற்கு வழிவிடும் விதமாகவே இந்த காரை உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து அகற்ற மினி திட்டமிட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் கார் மாடலான ஏஸ்மேன் (Aceman eCar) கார் மாடலுக்கு வழிவிடும் பொருட்டே கிளப்மேன் வெளியேற்றத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன.

இந்த காரை முதன் முதலில் 2017 ஆம் ஆண்டிலேயே மினி விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, 2016ம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை கிளப்மேன்-ஐ அது விற்பனைக்குக் கொண்டு வந்தது. உலக அளவில் நல்ல வரவேற்பு இந்த காருக்கு கிடைத்தது. பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் (Hatchback) கார் மாடலே இதுவாகும்.

Mini cooper s clubman interior

இத்தகைய கார் மாடலுக்கே பிரியாவிடை கொடுத்திருக்கின்றது மினி. உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கி இருக்கின்றன. உலக நாடுகளின் இந்த முயற்சிக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை கைவிட்டு முழுமையாக மின்சாரம் மற்றும் பிற சக்தியால் இயங்கும் வாகனங்களின் உருவாக்கத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஓர் செயல்பாட்டிற்கு வித்திடும் வகையிலேயே மினியும் அதன் கிளப்மேன் கார் மாடலை விற்பனையில் இருந்து ஏஸ்மேன்-ஐ விற்பனைக்குக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. கிளப்மேன் கார் மாடலின் அனைத்து வெர்ஷன்களும் ஆக்ஸ்ஃபோர்டு உற்பத்தி ஆலையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. இங்கேயே தற்போது கிளப்மேனின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

Mini cooper s clubman front view

ஏஸ்மேன் எலெக்ட்ரிக் காருடன் சேர்த்து புதிய கூப்பர் கார் மாடலையும் மினி உலக அளவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த புதிய கூப்பர் காரானது 3 டோர்கள், 5 டோர்கள் மற்றும் கன்வெர்டபிள் ஆகிய மூன்று விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த புதிய மினி கூப்பர் கார்களும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை வருகின்ற 2030 ஆம் ஆண்டு வரை மட்டுமே உற்பத்தி செய்ய அது திட்டமிட்டுள்ளது. இதற்கு பின்னர் அந்நிறுவனம் முழுமையாக மின்சார வாகன உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், 2030க்கு பின்னர் கூப்பர் உள்ளிட்ட பிராண்டின் மற்ற அனைத்து கார் மாடல்களும் மின்சார வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மினி நிறுவனம் மின்சார கார் உற்பத்திக்கு என்றே பெரும் தொகையை ஒதுக்கி இருக்கின்றது. சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயை அது மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஒப்புதல்கூட ஏற்கனவே இங்கிலாந்தில் வாங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் மினி நிறுவனம் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை கைவிட இருப்பது அதன் கார் ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சொகுசு மற்றும் பிரீமியம் தர கார் உற்பத்தியில் பெயர்போனதாக மினி இருக்கின்றது. ஆனால், இந்த நிறுவனம் ஆரம்ப கட்டத்தில் டிராவல்லர் வகை வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் சில மாற்றங்களை மினி நிறுவனம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் தற்போது கன்ட்ரிமேன் கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இத்துடன், கூப்பர் எஸ்இ இவி மற்றும் கூப்பர் பெட்ரோல் ஆகியவற்றையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் விரைவில் ஏஸ்மேன் காரையும் அது விற்பனைக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வருகைகுறித்த எந்தவொரு தகவலையும் மினி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 20:00 [IST]
English summary
Mini clubman production stops here is more details
மேலும்... #மினி #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X