2015க்கு அப்புறம் மீண்டும் உற்பத்தியை தொடங்கி இருக்காங்க.. ஸ்விஃப்ட் போல இருக்கும் ஆனா சொகுசான பயணத்தை தரும்!!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று 2015 ஆம் ஆண்டில் தன்னுடைய முன்னணி கார் மாடல் ஒன்றின் உற்பத்தியை ஒட்டுமொத்தமாக கைவிட்ட நிலையில் மீண்டும் அதே கார் மாடலின் உற்பத்தி பணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது வேறு எந்த நிறுவனமும் அல்ல மினி (Mini) நிறுவனம்தான் அது. கூப்பர் கன்வெர்டபிள் (Cooper Convertible) கார் மாடலின் உற்பத்தி பணிகளையே அது 2015 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக நிறுத்தி இருந்தது.

இந்த நிலையே அந்த கார் மாடலின் உற்பத்தியை மினி நிறுவனம் மீண்டும் தொடங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் கூப்பர் கன்வெர்டபிள்-ம் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விளைவாகவே அந்த காரின் உற்பத்தியை மீண்டும் மினி கையில் எடுத்துள்ளது. இது மினி கூப்பர் கன்வெர்டபிள் கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Mini cooper convertible

மினி நிறுவனம் அதன் ஆக்ஸ்ஃபோர்டு உற்பத்தி ஆலையிலேயே கூப்பர் கன்வெர்டபிள் கார் மாடலின் உற்பத்தி பணிகளை தொடங்கி இருக்கின்றது. இதுவே மினி நிறுவனத்தின் தாயகம் ஆகும். மேலும், மஹிந்திரா தார் கார் மாடலை போல 3 டோர்கள் மற்றும் 5 டோர்கள் வெர்ஷன்களில் இந்த கார் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது தயாரிக்கப்படுவது கூப்பர் கன்வெர்டபிளின் 4ஆம் தலைமுறை வெர்ஷன் ஆகும். ஆகையால், ஏகப்பட்ட சிறப்புகளைத் தாங்கியதாக இது இருக்கும் என கூறப்படுகின்றது. புதிய வெளிப்புற தோற்றம் மற்றும் புதிய உட்புறத்தைக் கொண்டதாகவே இந்த காரை தாங்கள் தயாரித்து இருப்பதாக மினி நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இத்துடன், அட்வான்ஸ்டு அம்சங்கள் நிறைந்த வாகனமாகவும் இதனை அது தயார் செய்திருக்கின்றது. மிக முக்கியமாக எஞ்சினைப் பொருத்த வரை லேட்டஸ்ட் 4 சிலிண்டர், பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த உலகத்திற்கு முதன் முதலில் மினி கூப்பர் கன்வெர்டபிள் அறிமுகம் செய்யப்பட்டது 2004 ஆம் ஆண்டிலேயே ஆகும்.

2008 ஆம் ஆண்டு வரை இந்த முதல் தலைமுறை விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே 2015 ஆம் ஆண்டில் இந்த காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக மினி கைவிட்டது. இப்போது நான்காம் தலைமுறை கூப்பர் கன்வெர்டபிளையே மினி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்தியாவிலும் சீக்கிரமே இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், உலக அளவில் உள்ள சொகுசு கார் விரும்பிகளைக் கவரும் விதமாக இந்த காரில் மினி நிறுவனம் பல்வேறு ஆடம்பர அம்சங்களையும், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அதில் என்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை. விரைவில் இதுகுறித்த விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது ஓர் கன்வெர்டபிள் வகை வாகனம் என்பதால் கட்டாயம் இளம் தலைமுறையினரை வெகுவாக இந்த கார் மாடல் கவரும் என்று நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்ப்பதற்கு ஸ்விஃப்ட் காரை போல இது தென்பட்டாலும், அந்த காரைவிட பலமடங்கு அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய கார் மாடலே கூப்பர் கன்வெர்டபிள் ஆகும். மிக முக்கியமாக இதன் மேற்கூரையை தேவைக்கேற்ப விரித்து மற்றும் மடக்கிக் கொள்ள முடியும். இந்த வசதியை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரில் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை புதிய தலைமுறை கூப்பர் கன்வெர்டபிள் அதனுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 5:00 [IST]
English summary
Mini cooper convertible resumes production at oxford plant with modern features
மேலும்... #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+