சைஸில் ரொம்ப சிறியது... வீட்டுக்கு ஒன்றை வாங்கி போடலாம்!! இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்!

பிஎம்டபிள்யூ (BMW) கார்களை வாங்குவதற்கு இந்தியாவில் எவ்வளவு பெரிய கூட்டம் உள்ளதோ அதேபோன்று பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் மினி கார்களை வாங்குவதற்கும் சில ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, கேரள மக்கள் மத்தியில் மினி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் மினி கூப்பர் எஸ் மற்றும் கண்ட்ரிமேன் கார்களுக்கு ப்ரீ-புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, எவ்வளவு தொகையில் இந்த கார்களை புக் செய்யலாம் என்பதையும், இந்த மினி கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ குழுமத்தில் ஒரு அங்கமாக வகிக்கும் மினி பிராண்டில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூப்பர் 3-டோர் மற்றும் கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் தற்போது, மினி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் புதிய தலைமுறை கூப்பர் எஸ் மற்றும் கண்ட்ரீமேன் இ எஸ்யூவி கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

mini cars bookings open

இதன் மூலமாக, இந்தியாவில் உள்ளவர்களாலும் இந்த மினி கார்களை புக் செய்ய முடியும். புதிய மினி கூப்பர் எஸ் 3-டோர் ஹேட்ச்பேக் காரை பொறுத்தவரையில், இது இந்த காரின் 4ஆம் தலைமுறை வெர்சனாகும். முந்தைய தலைமுறை உடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை மினி கூப்பர் காரின் தோற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. காரின் வெளிப்பக்க தோற்றத்தில் புதிய லைன்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் காரின் தோற்றமும் நன்கு மெருக்கேற்றப்பட்டு உள்ளது. புதிய மினி கூப்பர் எஸ் காரில் ரீடிசைனில் கிரில், கஸ்டமைஸ் செய்துக் கொள்ளக்கூடிய எல்இடி டி.ஆர்.எல்-களுடன் புதிய வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த முறை இந்த கார் பார்ப்பதற்கே தோற்றத்தில் மிகவும் எளிமையாக உள்ளது. அதாவது, அதற்கேற்ப காரின் வெளிப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள லைன்கள் அனைத்தும் தெளிவாக உள்ளது.

mini cars bookings open

புதிய கூப்பர் எஸ் காரின் பின்பக்கத்தில் யூனியன் ஜாக்-தீமில் டெயில்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு உள்ளே மினி ஆப்ரேட்டிங் சிஸ்டம் 9 உடன் 9.4 இன்ச்சில் பெரிய அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே உள்ளது. இந்த புதிய அம்சங்களுடன் சில அம்சங்களை பழைய கூப்பர் எஸ் காரில் இருந்து அப்படியே புதிய கூப்பர் எஸ் பெற்றுள்ளது. இதில் முக்கியமானதாக சொல்ல வேண்டுமென்றால், காருக்குள் நிறைய இடங்களில் வழக்கம்போல் டோக்கிள் டைப் ஸ்விட்ச்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய மினி கூப்பர் எஸ் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி மற்றும் 300 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆற்றல்கள் 7-ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் முன் சக்கரங்களுக்கு செல்கிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 6.6 வினாடிகளில் எட்டிவிடலாம்.

mini cars bookings open

புதிய மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், ஏற்கனவே கூறியதுபோல் இந்த காரின் தோற்றமும் மெருக்கேற்றப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காருக்கு உள்ளே வட்ட வடிவில் புதிய ஓ.எல்.இ.டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி அதிகப்பட்சமாக 462கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என மினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மினி கார்களை புக் செய்பவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்த கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால், இந்த கார்களின் விலைகளையும் அதிகமாக எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் விற்பனையில் இந்த கார்களுக்கு பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 மற்றும் வால்வோ எக்ஸ்.சி40 ரீசார்ஜ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், மினி கார்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், ஸ்டைலாக இருப்பதால் சினிமா நடிகர், நடிகைகள் மினி கார்களை பரவலாக வாங்குகின்றனர். அத்தகையவர்களுக்கு இந்த புதிய கார்களின் புக்கிங் துவக்கம் ஆனது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 19:49 [IST]
English summary
Mini cooper s and countryman electric car bookings open in india
மேலும்... #mini #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X