இந்த காரோட விலை ரூ45 லட்சம் ஆனாலும் இதை வாங்க ஏகப்பட்ட போட்டி இருக்குது! அப்படி இதுல என்ன இருக்குது?
பிஎம்டபிள்யூ தரப்பில் இருந்து இன்று மினி கூப்பர் எஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ஐந்தாம் தலைமுறை காராக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.இதில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. பழைய காரிலிருந்து இதில் என்னென்ன அப்டேட்கள் இருக்கின்றன? இதன் விலை என்ன? இதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
சர்வதேச அளவில் மினி என்ற நிறுவனம் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் மிக முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தை பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் நடத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் மினி கூப்பர் எஸ் என்ற கார் ஐந்தாம் தலைமுறையாக அப்டேட் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த காரை இந்தியாவிற்கு கொண்டுவர மினி நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி இன்று மினி கூப்பர் எஸ் காரின் ஐந்தாம் தலைமுறை வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ஒரு மூன்று டோர் கொண்ட ஹேட்ச்பேக் காராகும். இந்த காரில் நான்கு பேர் பயணம் செய்ய முடியும். ஏற்கனவே இந்த காரின் நான்காம் தலைமுறை வெர்ஷன் இந்தியாவில் விற்பனையாகி வரும் நிலையில் செய்து நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 2.0லிட்டர் 4 சிலிண்டர் ரீஃபைன் செய்யப்பட்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு 24எச்பி பவரையும், 300என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் வடிவமைப்பை பொறுத்தவரை மினிமலான அப்ரோச் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் வட்ட வடிவிலான டிசைன் அதிக இடங்களில் காணப்படுகிறது. பின்பக்க டெயில் கேட் முந்தைய தலைமுறை காரை விட கொஞ்சம் ஷார்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பை பார்க்கும் போது இதற்கு முந்தைய காரில் உள்ள அதே வடிவமைப்புகள் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சிம்பிளான வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை நடுப்பகுதியில் வட்ட வடிவிலான ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தகவல்களும் டிஸ்ப்ளே ஆகும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு சில ஸ்விட்ச்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பட்டன்கள் ஸ்கிரீன் உள்ளேயே ஆப்ஷனாக இருக்கும்படி டச் ஸ்கிரீன் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பொருத்தவரை வட்ட வடிவிலான ஓஎல்இடி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தை சாம்சங் நிறுவனம் தான் வடிவமைத்து கொடுத்துள்ளது. உட்புறத்தில் உள்ள ஹைலைட்டான விஷயமே இதுதான். இதுபோக இந்த கேபின் உள்ளே ஏகப்பட்ட டெக்சர்கள் இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது
இந்த கார் இந்தியாவிற்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 44.90 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார் என்பதால் இந்த காரின் விலை அதிகமாக இருக்கிறது.
இந்த கால தற்போது பெட்ரோல் வெர்ஷன்களில் அறிமுகமாக இருந்தாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மினி நிறுவனத்தின் கண்ட்ரிமேன் என்ற எலெக்ட்ரிக் வெர்ஷன் காரும் இன்று அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவும் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி நிறுவனம் இந்த கூப்பர் எஸ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அதன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் ஐந்தாம் தலைமுறை காரில் உள்ள அப்டேட்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு அறிமுகமாகியுள்ளன. இதன் விலை அதிகமாக இருந்தாலும் இந்த காருக்கான ரசிகர்கள் அதிக அளவில் இருப்பதால் பலன் இந்த காரை வாங்க வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications









