சிங்கிள் சார்ஜ்ல சென்னை டூ மதுரை நிக்காம போகலாம்! லவ்வர் கூட ஜாலி டிரிப் போக ஏற்ற கார் இது!
மினி நிறுவனம் இன்று இந்தியாவில் தனது கண்ட்ரிமேன் என்ற எலெக்ட்ரிக் காரை அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் பிரபலமான காராக இருக்கும் நிலையில், தற்போதைய அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது பலர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மினி என்ற நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் மினிமலான வடிவமைப்பு கொண்ட காரை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான கார்களாக இருக்கின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் கண்ட்ரிமேன் என்ற காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் தற்போது இந்தியாவில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள மினி கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை சர்வதேச அளவில் விற்பனையாகி வரும் அதே கார் தான் இந்தியாவிற்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் இ மற்றும் எஸ்இ ஆகிய இரண்டு விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனையாகி வருகிறது. இ வேரியன்ட் பேஸ் வேரியண்டாகவும் மினிமலான வடிவமைப்பு கிட்டத்தட்ட நிறுவனத்தின் கூப்பர் எஸ் காரை போன்ற தோற்றம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மினி நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனம் நடத்திவரும் மற்றொரு துணை நிறுவனம் என்பதால் பிஎம்டபிள்யூ நிறுவனம் நிறுவனத்தின் தொழிற்நுட்பங்களை மினி நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்கிறது. அதன்படி கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் கார் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 என்ற எலெக்ட்ரிக்கில் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் தயாராகிறது. இதிலுள்ள பேட்டரி ஆப்ஷனை பொருத்தவரை 66.5கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது 205பிஎச்பி பவரையும் 250என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரில் முன்பக்க வீல் டிரைவ் வழங்கும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரியை சார்ஜ் செய்ய டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது 10 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 29 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடுகிறது. மேலும் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 462 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே கண்ட்ரிமேன் இவி வாகனம் சர்வதேச அரங்கில் டூயல் மோட்டார் சிஸ்டம் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனுடன் விற்பனையாகி வருகிறது. அந்த ஆப்ஷன் இந்தியாவில் உள்ள காரில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த காரை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்து அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

காரின் வடிவமைப்பை பொறுத்தவரை அதிக ஏரோடைனமிக் அம்சம் கொண்ட வடிவமைப்பாக இருக்கிறது. முன்பக்கம் உள்ள கிரில் பகுதி முற்றிலுமாக மூடப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல்கள் கூட ஏரோடைனமிக்ஸ் அம்சம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பாடி கிளாடிங் பகுதி நீட்டிக்கப்பட்டதாக இருக்கிறது. இது காருக்கு ஒரு ரக்கட் லுக்கை கொடுக்கிறது.
இந்த காரின் பின்பக்க வடிவமைப்பை பொறுத்தவரை நீள வாக்கிலான எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் கண்ட்ரிமேன் என்ற எழுத்தின் பேஜிங் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த காரின் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த காரின் உட்புறமும் ஏற்கனவே உள்ள பழைய கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான் முன்னரே சொன்னபடி இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இருப்பதால், இந்த காரை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அதிக வரி செலுத்த வேண்டும். அதனால் இந்த கார் ரூபாய் 54.90 லட்சம் என்ற ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கான புக்கிங் அந்நிறுவனம் ஏற்கனவே துவங்கி விட்டது. மார்க்கெட்டில் உள்ள பல கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகிறார்கள். இந்நிலையில் மினி நிறுவனம் இப்படியான ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தி அதன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த கார் விற்பனை நிச்சயம் ஓரளவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









