கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. நல்லா வச்சு செய்தும் தன்னுடைய தரத்தை இந்த காரு விட்டு கொடுக்கல!!

மினி (Mini) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்று அசத்தி இருக்கின்றது. கன்ட்ரீமேன் (Countryman), இதுவே 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று நிறுவனத்திற்கு பெருமிதம் சேர்த்திருக்கும் கார் மாடல் ஆகும். யூரோ என்சிஏபி (Euro NCAP) இடமிருந்தே கன்ட்ரீமேன் உச்சபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. பிரீமியம் அம்சங்கள் மற்றும் அதிக செயல் திறனுக்கு பெயர்போன கார் மாடலாக மினி கன்ட்ரீமேன் காட்சியளிக்கின்றது. இந்த காரே தற்போது பாதுகாப்பிற்கும் பெயர்போனதாக மாறியிருக்கின்றது.

இந்த காரின் பாதுகாப்பு தரத்தை அறிய வேண்டும் என்பதற்காக பல நிலைகளில் வைத்து யூரோ என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. அதாவது, காரின் பக்கவாட்டு பகுதி, முன் பகுதி என அனைத்து நிலைகளிலும் வைத்தே அதனை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது.

Mini countryman achieves 5-star safety rating

இவை அனைத்திலும் திறம்பட செயல்பட்டு தன்னுடைய தரத்தை நிரூபித்துக் காட்டியிருக்கின்றது கன்ட்ரீமேன். குறிப்பாக, காருக்குள் மனிதர்களுக்கு பதிலாக வைக்கப்பட்டு இருந்த டம்மி (பொம்மை)-களுக்கு அதிக பாதுகாப்பை அது வழங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே ஐந்து நட்சத்திர ரேட்டிங்கை கன்ட்ரீமேன் காருக்கு யூரோ என்சிஏபி தூக்கி கொடுத்திருக்கின்றது.

ஆகையால், பெரும் விபத்து ஏற்பட்டாலும் இந்த கார் ஆபத்தில் இருந்து தன்னுடைய பயணிகளுக்கு மிக சிறந்த பாதுகாப்பு வளையத்தை வழங்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பயணிக்க உகந்த வாகனம் என்பதும் இந்த மோதல் ஆய்வின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

Countryman achieves 5-star safety rating

இந்த கார் அதனுள் பயணிப்பவர்களுக்கு மட்டுமல்ல பாதசாரிகளுக்கும் உகந்த பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. விபத்தை தவிர்க்கும் விதமான அம்சத்தை இந்த காரில் மினி வழங்கி இருக்கின்றது. இதுவே, பாதசாரிகள் மற்றும் வெளிப்புறத்தில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

இந்த காரில் இன்னும் பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவையே காருக்குள் இருப்பவர்களுக்கு இரும்பு பெட்டகம் போன்ற பாதுகாப்பு திறனை வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக அவசர கால பிரேக்கிங் சிஸ்டம், அவசரகால அலாரம், பன்முக ஏர் பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையே கன்ட்ரீமேன் காரில் மினி வழங்கி இருக்கின்றது.

மினி கன்ட்ரீமேன் (Mini Countryman) இந்தியாவிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், மின்சார (EV) வெர்ஷன் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 54.90 லட்சம் ஆகும். பார்க்க குட்டியாக இருந்தாலும் இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். ஐந்து பேருக்கும் சௌகரியமான டிராவல் அனுபவம் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 462 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுமட்டுமில்லைங்க, இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி பேக்கை டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (DC Fast Charging) பாயிண்டை வைத்து சார்ஜ் செய்கையில் வெறும் 29 நிமிடங்களில் 10 சதவீத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். வட்ட வடிவ டிஜிட்டல் திரை, பன்முக கன்ட்ரோல்களைக் கொண்ட இரண்டு ஸ்போக் ஸ்டியரிங் வீல், செல்போன் இணைப்பு வசதி உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பாதுகாப்பு ரேட்டிங்கானது ஐரோப்பிய சந்தைக்கான மினி கன்ட்ரீமேன் கார் மாடலுக்கானது ஆகும். இந்த சந்தைக்கு ஏற்ப சில தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களை கன்ட்ரீமேன் காரில் மினி வழங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இந்த ரேட்டிங் இந்தியாவிற்கான கன்ட்ரீமேன் இவி-க்கு பொருந்ததாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 11, 2024, 20:48 [IST]
English summary
Mini countryman receives impressive 5 star euro ncap safety rating for advanced protection
மேலும்... #mini
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+