கம்மி விலையில் மினி ஃபார்ச்சூனர் கார் ரெடியாகுது! மஹிந்திரா தலையில் மண்ணை அள்ளி போட்ட டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரை மினி வெர்ஷனை வடிவமைத்து மினி ஃபார்ச்சூனர் காராக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 4X4 செக்மெண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மட்டுமே தனிக்காட்டு ராஜாவாக விற்பனையாகி வரும் நிலையில் அந்த கார்களுக்கு போட்டியாக இந்த கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ மற்றும் தார் ராக்ஸ் ஆகிய கார்கள் போட்டியாளர்கள் யாரும் இன்றி மிகப்பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. டொயோட்டா நிறுவனத்திற்கு இந்த செக்மெண்ட் மீது தற்போது கண் பார்வை திரும்பியுள்ளது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனமும் ரக்கடான 4X4 எஸ்யூவி கார் ஒன்றை இந்திய கார் மார்க்கெட்டில் களம் இறக்க திட்டமிட்டு வருகிறது.

mini fortuner

டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய கார் மஹிந்திரா நிறுவனத்தின் போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கார் ஃபார்ச்சூனர் கார் போல பாடி-ஆன்-ஃபிரேம் சேஸ்கொண்டு உருவாக்கப்படுமா என்பது தெரியவில்லை. அதற்கு பதிலாக புதிய பிளக்ஸிபில் பிளாட்பார்மில் இந்த கார் உருவாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த புதிய பிளக்ஸிபில் பிளாட்பார்ம் பல்வேறு பாடி செயல்களையும் பல்வேறு பவற்றின் ஆப்ஷன்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸிபில் பிளாட்பார்ம் ஏற்கனவே நிறுவனத்திடம் உள்ள டிஎன்ஜிஏ பிளாட்பார்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இந்த டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

mini fortuner

கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறிய பிறகு அதன் எண்டேவர் கார் இந்தியாவில் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது முதல் டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காருக்கு எந்தவித போட்டியும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக விற்பனையாகி வந்தது.

இதனால் டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரின் விலையை மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் பல இடங்களில் ரூ 60 லட்சம் செலவு செய்தால் தான் இந்த ஃபார்ச்சூனர் காரை வாங்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது இந்தியாவில் இருக்கிறது.

பார்ச்சூனர் காரின் விலை அதிகரித்ததன் காரணமாக இந்த காரின் விற்பனையும் சமீபகாலத்தில் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 3698 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் வெறும் 2473 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இந்த விற்பனை சரிவிற்கு இந்த காரின் விலை ஏற்றம் தான் முக்கியமான காரணம். இந்நிலையில் மார்க்கெட்டில் விலை குறைவான அதே நேரம் ரக்கட் லுக் உள்ள காருக்கான தேவை அதிகமாக இருந்தது0 அந்த தேவையை மஹிந்திரா நிறுவனம் பூர்த்தி செய்து விட்டது.

குறைந்த விலையில் ராக்கட் லுக் கொண்ட ஒரு எஸ்யூவி காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஃபார்ச்சூனர் காருக்கு பதிலாக ஸ்கார்பியோ என் அல்லது மஹிந்திரா தார் ஆகிய கார்களை வாங்க துவங்கி விட்டார்கள். இதனால் அந்த கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்தது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டையும் பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் காரின் மினி வெர்ஷனை வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளது.

இதன்படி "மினி பார்ச்சூனர்" கார் பல்வேறு அம்சங்களுடன் பிரீமியமான விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்ன இன்ஜின் பொருத்தப்படுகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. நமக்கு தெரிந்த தகவல் படி இதில் பெட்ரோல் மற்றும் ஆகிய இரண்டு விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் பட வாய்ப்பு இருக்கிறது. இதுபோக எதிர்காலத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

தற்போது உள்ள டாடா இன்னோவா ஹைகிராஸ் காரில் 2.0 லிட்டர் 4X4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இதே இன்ஜின் பொருத்தப்பட்ட மினி ஃபார்ச்சூனர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இந்த கார் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய போட்டி நிலவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய மினி ஃபார்ச்சூனர் காரை கொண்டு வருவதன் மூலம் ஸ்கார்பியோ மற்றும் ஆகிய கார்களுக்கு போட்டியாக புதிய காரை களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம். ரக்கட் லுக்கில் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் பெயரிலேயே ஒரு மினி கார் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என சொல்லுவார்கள்?

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2024, 11:02 [IST]
English summary
Mini fortuner development rival scorpio roxx
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+