கம்மியான விலையில் காரை வாங்கிட்டு இப்படி கூட பண்ணலாமா? காரின் விலை என்னமோ ரூ.11 லட்சம் தான்...!!

2024 ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் டிஆர்எல்-கள் மற்றும் பின்பக்கத்தில் டெயில்லேம்ப்கள் உடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விலையுயர்ந்த கிரெட்டா கார் போன்று இந்த கார் காட்சியளிக்கிறது. இந்த மாடிஃபை கிரெட்டா காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய மார்க்கெட்டில் பிரபலமான எஸ்யூவி கார்களுள் ஒன்று ஹூண்டாய் கிரெட்டா ஆகும். இதனாலேயே கிரெட்டா காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹூண்டாய் நிறுவனம் அப்டேட் செய்து விடுகிறது. இந்த வகையில், புதிய 2024ஆம் ஆண்டிற்காக சமீபத்தில் கிரெட்டா கார் அப்கிரேட் செய்யப்பட்டது. வழக்கம்போல், 2024 கிரெட்டா காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக இ நிர்ணயிக்கப்பட்டது.

modified hyundai creta e variant

மற்ற டாப் வேரியண்ட்கள் அளவிற்கு கிடைக்காது என்றாலும், கிரெட்டா இ காரில் போதுமான அடிப்படை வசதிகளை குறைந்த விலையில் பெறலாம். பட்ஜெட் விலையில் கிரெட்டா காரை வாங்க நினைப்பவர்களுக்கு எண்ட்ரீ-லெவல் இ வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். இருப்பினும், குறைந்த விலையில் கிரெட்டா காரை வாங்கி விட்டு பின்னர் அதில் தங்களுக்கு விருப்பமான வசதிகளை சேர்த்துக் கொள்வோரும் இருக்கின்றனர்.

ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள கஸ்டமைஸ் செய்யப்பட்ட கிரெட்டா இ கார் தோற்றத்தில் மட்டுமின்றி, செயல்படுதிறனிலும் மாடிஃபை செய்யப்பட்டு உள்ளது. மிக முக்கிய மாற்றமாக, காரின் முன்பக்கத்தில் க்ரில் டிசைன் மாற்றப்பட்டுள்ளது. கிரில் பகுதிக்கு பளபளப்பான க்ரோம் கொடுக்கப்பட்டுள்ளதால், கார் பிரீமியம் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

modified hyundai creta e variant

காரின் கிரில் பகுதியை இவ்வாறு மாற்றுவதற்கு ரூ.15,500 செலவானதாக காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இத்துடன், முன்பக்க ஹெட்லைட்கள் எல்இடி-க்கு அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இவ்வாறு மாற்றப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள் இரண்டும் லைட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. 150 வாட்ஸ் திறன் கொண்ட இந்த புரோ7எல்இடி ஹெட்லைட் ஜோடியின் விலை ரூ.6,500ஆக குறிப்பிட்டுள்ளனர்.

இவை இரண்டையும் இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ள டிஆர்எல்-இன் விலை ரூ.5,800 என தெரிவித்துள்ளனர். இதேபோல், காரின் பக்கவாட்டிலும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ரூ.12,000 என சக்கரங்களுக்காக மட்டும் ரூ.48,000 செலவாகி உள்ளது. இந்த அலாய் சக்கரங்கள் காருக்கு அழகு சேர்த்திருப்பது மட்டுமின்றி, காரின் செயல்படுதிறனையும் மேம்படுத்தியுள்ளதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

modified hyundai creta e variant

காருக்கு உள்ளே வழக்கமான டோர் ஹேண்டில்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கிரே நிறத்திலான ஹேண்டில்கள் பொருத்தப்பட்டு உள்ளன. பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற விங் மிரர்களில் இண்டிகேட்டர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அத்துடன், இந்த விங் மிரர்கள் இந்த காரில் எலக்ட்ரிக் உதவியுடன் தன்னிச்சையாக மடங்கி விரியும் திறனை பெற்றுள்ளன.

இவற்றுடன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கண்ட்ரோல் பொத்தான்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவையும் இந்த கஸ்டமைஸ் கிரெட்டா காரில் சேர்க்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டுள்ளது. மேலும், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா சிஸ்டம் என ஏகப்பட்டவை இந்த காரில் சேர்க்கப்பட்டுள்ளன. காருக்கு வெளியே, பின்பக்கத்தில் டெயில்லைட்ஸ் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

modified hyundai creta e variant

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாடிஃபிகேஷன்களுக்கு மொத்தமாக ரூ.7 லட்சம் வரையில் செலவாகி உள்ளதாக கீழுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிரெட்டா இ காரின் விலையை காட்டிலும் ரூ.7 லட்சம் அதிகம். 2024 கிரெட்டா காரின் டாப் வேரியண்ட்டின் விலை கூட இதனை காட்டிலும் ரூ.1 - 2 லட்சம் குறைவாக இருக்குமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ரூ.7 லட்சம் செலவு செய்ததற்கு இணையான சொகுசு பயண அனுபவம் இந்த காரில் கிடைப்பதாக இந்த காரின் ஓனர் தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 8, 2024, 19:02 [IST]
English summary
Modified hyundai creta e variant looks like top sx o variant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X