மாருதி கார் இது என சொன்னால் சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க!! 10 லட்ச ரூபாய் காரை இப்படி கூட மாற்றலாமா?
மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்று பிரெஸ்ஸா (Brezza) ஆகும். சில வருடங்களுக்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவின் நியூ ஜென்ரேஷன் காராக பிரெஸ்ஸா கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் இந்த 2 வருடங்களில் பல்வேறு பிரெஸ்ஸா கார்கள் அவற்றின் ஓனர்களால் மாடிஃபை செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இங்கு ஒரு பிரெஸ்ஸா கார் லக்சரியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை பிரெஸ்ஸா காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
கஸ்டமர்களின் விருப்பத்திற்கேற்ப கார்களை மாடிஃபிகேஷன் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் பல இந்தியாவில் உள்ளன. ஏனெனில், நம் இந்தியர்கள் பொதுவாகவே மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான காரை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பக் கூடியவர்களாவர். இதற்கு ஏற்றவாறு, கார்களை மாடிஃபிகேஷன் செய்வதற்காக புது, புது டெக்னாலஜிகள் தொடர்ச்சியாக கண்டுப்பிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

அவற்றின் உதவியுடன் லக்சரியான தோற்றத்திற்கு மாற்றப்பட்ட பிரெஸ்ஸா காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த குறிப்பிட்ட மாடிஃபை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பிரெஸ்ஸா காரின் முன்பக்கத்தில் பம்பர் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங்குகளும் வெள்ளை நிறத்தில் உள்ளன. காரின் முன்பக்கத்தில் புதிய கிரில் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னால் இருந்து பார்க்க, இந்த பிரெஸ்ஸா கார் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. வெள்ளை நிறத்திற்கு ஏற்ப, காரின் ரூஃப், சைடு பில்லர்கள் மற்றும் பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பிரெஸ்ஸா காரின் வெளிப்பக்கத்திற்கு ஏற்ப, காருக்கு உள்ளேயும் நிறைய மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, மார்பிள் போன்றதான டேஸ்போர்டு நம்மை பெரிதும் வசிகரீக்கிறது. இது காரின் கேபினை மேலும் அழக்கூட்டி உள்ளது. காரின் வெளிப்பக்கத்தை போன்று உட்புற கேபினும் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் நுழைந்தது போன்ற உணர்வு இந்த பிரெஸ்ஸா காரினுள் ஏற்படுகிறது.
கேபின் முழுக்க வெள்ளை நிறத்தில் இருந்தாலும், ஸ்டேரிங் சக்கரம், இருக்கைகள், டோர் பேனல்கள் மற்றும் செண்டர் கன்சோல் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் இருப்பதால், காரின் கேபின் ஆனது வெள்ளை & கருப்பு நிறங்கள் கலந்த கலவையாக காட்சியளிக்கிறது. கருப்பு நிற ஸ்டேரிங் சக்கரத்தில் வெள்ளை நிற தையல்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளன. இவற்றுடன், பயணிகளின் கூடுதல் சவுகரியத்திற்காக இருக்கைகளில் எக்ஸ்ட்ரா குஷின்களை சேர்த்துள்ளனர்.

மற்றப்படி, இந்த பிரெஸ்ஸா காரின் என்ஜின் & கியர்பாக்ஸில் மாற்றங்கள் செய்யப்பட்டது போன்றதான தகவல்கள் இல்லை. பிரெஸ்ஸா காரில் 1.5 லிட்டர் கே-சீரிஸ் ட்யூயல்-ஜெட் ட்யூயல் விவிடி என்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 101.6 பிஎச்பி மற்றும் 4,400 ஆர்பிஎம்-இல் 136.8 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ஸ்டார்டர் ஜெனரேட்டர் இணைக்கப்படுகிறது.
பிரெஸ்ஸாவை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். பிரெஸ்ஸா காரில் சிறப்பம்சங்களாக எலக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட் அப் டிஸ்பிளே, 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், அர்காமைஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட்பிளே புரோ இன்ஃபோடெயின்மெண்ட், வைகல் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாடிஃபை பிரெஸ்ஸா கார் பார்ப்பதற்கு அட்டகாசமானதாக இருந்தாலும், இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்கள் சட்டத்திற்கு புறம்பானவைகளாக பார்க்கப்படுகின்றன. ஆதலால், இவ்வாறான மாடிஃபிகேஷன்களை செய்வதற்கு முன்னர் அருகில் உள்ள லோக்கல் ஆர்டிஓ உடன் கலந்துரையாடவும். இருப்பினும், நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான பிரெஸ்ஸா கார் மாடிஃபிகேஷன் இது என சொல்லலாம்.


Click it and Unblock the Notifications









