கேஜிஎஃப் படத்தில் கூட இப்படியொரு வாகனத்தை பார்க்க முடியாது!! ரோட்டுக்கு எடுத்துனு வந்தால் தீயா இருக்கும்!

மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) வாகனம் ஒன்று அளவில்-பெரிய சக்கரங்களுடன் மாடிஃபை செய்யப்பட்டு உள்ளது. பெரிய சக்கரங்களை கொண்டிருப்பதாலேயே இந்த மாடிஃபை ஜிம்னி வாகனம் தொடர்பான வீடியோக்களும், படங்களும் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன. எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதில் ஒரு வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதிய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக ஜிம்னியை கடந்த 2023 ஜனவரி மாதத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. அப்போதே இந்த ஆஃப்-ரோடு வாகனத்திற்கான முன்பதிவுகளும் நாடு முழுவதும் துவங்கப்பட்டன. ஆனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஜிம்னி வாகனங்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் சில மாதங்கள் கழித்தே துவங்கின.

modified maruti suzuki jimny

வாடிக்கையாளர்களின் கைகளில் சென்றடைந்ததில் இருந்து, மாடிஃபை செய்யப்பட்ட பல்வேறு ஜிம்னி வாகனங்களை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், மற்றுமொரு ஜிம்னி வாகனம் அளவில் பெரியதான சக்கரங்கள் மற்றும் டயர்களுடன் மாடிஃபை செய்யப்பட்டு உள்ளது. ஜிம்னி வாகனங்கள் அதிகளவில் மாடிஃபை செய்யப்படுவதன் காரணமாக, இதற்காகவே 'ராக் & ரோடு' என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி மாருதி சுஸுகி சார்பில் நடத்தப்படுகிறது.

மாருதி சுஸுகி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் இந்த கண்காட்சி நிகழ்ச்சியில், 'கெர்ராரி ஆஃப் ரோடர்ஸ்' என்கிற பெயரில் கபீர் வாரைச் என்பவரால் இந்த மாடிஃபை ஜிம்னி வாகனம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. சக்கரங்களின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்த குறிப்பிட்ட ஜிம்னி வாகனத்தின் உயரமும் அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த மாடிஃபை வாகனத்தில் புதியதாக லிஃப்ட் கிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. எவ்வாறு மாருதி சுஸுகி ஜிம்னி வாகனம் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது என்பது குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நமக்கு கிடைத்துள்ள படங்களை வைத்து பார்க்கும்போது, சேறு, சகதிக்கான டயர்கள் மற்றும் ரக்டு தோற்றத்திலான புதிய அலாய் சக்கரங்கள் இந்த மாடிஃபை ஜிம்னி வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளதை காண முடிகிறது.

பெரிய சக்கரங்கள் வளைவில் திரும்புவதற்கு ஏதுவாக, வாகனத்தின் முன்பக்க பம்பர் இரு முனைகளிலும் நறுக்கப்பட்டு உள்ளது. மேலும், புதியதாக வாகனத்தின் A-பில்லரில் ஸ்னோர்கில் பொருத்தப்பட்டு உள்ளது. புதிய சக்கரங்கள் மற்றும் டயர்களினால் இந்த ஜிம்னியின் எடை அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றவாறு, வாகனத்தின் சஸ்பென்ஷன் செட்-அப்பும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

modified maruti suzuki jimny

இவற்றுடன், இந்த மாடிஃபை வாகனத்தின் என்ஜின் சிஸ்டத்திலும் கூடுதல் இயக்க ஆற்றலுக்காக சில பல மாடிஃபிகேஷன்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கண்காட்சியில் இந்த மாடிஃபை ஜிம்னியை காட்சிக்கு நிறுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், வாகனத்தின் எடை அதிகரித்துள்ளதால், என்ஜினுக்கு கூடுதல் பணி சுமை இருக்கும். ஆதலால், அதற்கேற்ப என்ஜினை ட்யூன் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மாருதி சுஸுகி ஜிம்னியில் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 104 பிஎஸ் மற்றும் 134.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஸெட்டா மற்றும் ஆல்பா என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஜிம்னியின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.74 லட்சத்தில் இருந்து ரூ.15.05 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது இன்றைய காலத்தில் சாதாரணமாகி விட்டது. ஆனால், அதேநேரம் வைகல் மாடிஃபிகேஷன்களுக்கு கட்டுப்பாடுகளும் வலுத்து வருகின்றன. ஆதலால், உங்களது வாகனங்களை இவ்வாறு மாடிஃபிகேஷன் செய்ய விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமைசேஷன் நிறுவனத்தை அணுக வேண்டியது அவசியமாகும். இந்த குறிப்பிட்ட மாடிஃபை செய்யப்பட்ட ஜிம்னி பார்ப்பதற்கு மிகவும் அருமையானதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 30, 2024, 22:41 [IST]
English summary
Modified maruti suzuki jimny with huge wheels at rock and road event
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+