கார், பைக் போல விற்பனையாகும் ஆட்டோ.. போற போக்க பார்த்தா ரோடு ஃபுல்லா இந்த ஆட்டோதான் இருக்கும் போலையே!
கார் மற்றும் பைக்குகளைப் போல இந்தியாவில் ஆட்டோ ஒன்று மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 123 ஆண்டுகள் பழைமையான நிறுவனமான முருகப்பா குழுமம் (Murugappa Group)-இன் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகின்றது மோந்த்ரா எலெக்ட்ரிக் (Montra Electric). இந்த பிராண்டின் சிறந்த படைப்பாக விளங்குகின்றது மோந்த்ரா சூப்பர் ஆட்டோ (Montra Super Auto). இது ஓர் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா (Electric Three Wheeler) ஆகும். இதற்கு ஆட்டோ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களே தற்போது வெளியாகி உள்ளன. இந்த மின்சார ஆட்டோ விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு ஓராண்டுகளே ஆகின்றது. இந்த நிலையிலேயே இதுவரை 5,000 யூனிட்டுகள் வரை மோந்த்ரா சூப்பர் ஆட்டோ டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் வாயிலாக இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நாடு முழுக்க 17 மாநிலங்களில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஐந்து ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகின்றது.
இதுமட்டுமில்லைங்க, சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் விதமான இருக்கைகள், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சம், கவர்ச்சியான வெளிப்புற தோற்றம் ஆகியவற்றைக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவாகவும் மோந்த்ரா சூப்பர் ஆட்டோ காட்சியளிக்கின்றது. இதன் விளைவாகவே நாட்டின் சில தொழிலதிபர்களையும் சொந்த பயன்பாட்டிற்கு வாங்கத் தூண்டிக் கொண்டிருக்கின்றது இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ.

அந்தவகையில், இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவை சோஹோ நிறுவன சிஇஓ-ஆன ஸ்ரீதர் வேம்பு பயன்படுத்தி வருகின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உகந்த ஆட்டோ என்பதை மோந்த்ராவின் சூப்பர் ஆட்டோ உறுதி செய்திருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 203 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
அராய் அமைப்பு வழங்கிய சான்றின்படியான தகவல் இதுவாகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ தன்னுள் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், முதன் முதலில் பன்முக டிரைவிங் மோட்-ஐப் பெற்ற இ-ஆட்டோவாகவும் இது காட்சியளிக்கின்றது. இதுதவிர, பார்க் அசிஸ்ட் மோட்-ம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோல இன்னும் பல சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவில் காண முடியும். குறிப்பாக, பயணிகளின் சிறந்த ரைடு அனுபவத்திற்காக பெரிய லெக்-ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதியையும் இந்த எலெக்ட்ரிக் கொண்டிருக்கின்றது. மேலும், சிறந்த ரைடு அனுபவத்திற்காக முன் பக்கத்தில் இரண்டு ஃபோர்க் கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஆட்டோவின் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இதில் 10 kW மற்றும் 60 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது வெறும் 4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 20 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இப்போதைய நிலவரப்படி இபிவி (ePV) 7.66 kWh பேட்டரி பேக் மற்றும் இபிவி 2.0 (ePV 2.0) 10 kWh பேட்டரி பேக் ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே மோந்த்ரா சூப்பர் ஆட்டோ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதன் வரிசையில் இபிஎக்ஸ் (ePX) இணைக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், இதன் வேரியண்ட் எண்ணிக்கை சீக்கிரமே 3ஆக உயர இருக்கின்றது. மேலும், இப்போது விற்பனையில் உள்ளவற்றில் ரெக்ஸின் கேனோபி (Rexin Canopy) வகை ரூஃபே வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், புதிய தேர்வில் ஹார்டு ரூஃபே (Hard Roof) வழங்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து பவர்ஃபுல் எல்இடி லைட் போன்றவையும் புதிய இபிஎக்ஸ் வேரியண்டில் வழங்கப்பட இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனைக்கு ஓராண்டிற்குள்ளாகவே 5 ஆயிரம் யூனிட் டெலிவரி என்பது எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா பிரிவில் மிக பெரிய சாதனை ஆகும். இதனால்தான் இந்த நிகழ்வை முருகப்பா குழுமம் தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமல்ல விரைவில் சரக்குகளை கையாள்வதற்கான எலெக்ட்ரிக் வாகனத்தையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








