ரெனால்ட் இந்த எலெக்ட்ரிக் காரதான் இந்தியால விற்பனைக்கு களமிறக்க போகுதா! பணத்த திரட்டி வச்சுட்டு ரெடியா இருங்க!

டாசியா (Dacia) நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட ஸ்பிரிங் இவி (Spring EV) எனும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை உலக அளவில் வெளியீடு செய்து இருக்கின்றது. டாசியா ஸ்பிரிங் இவி ஓர் ஹேட்ச்பேக் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

உலக அளவில் உள்ள பட்ஜெட் எலெக்ட்ரிக் கார் விரும்பிகளைக் கவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஓர் மின்சார கார் மாடலே இதுவாகும். இதையே 2024 ஆம் ஆண்டிற்கு ஏற்ப சில அப்டேட்டுகளை வழங்கி டாசியா வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரையே டாசியாவின் சகோதர நிறுவனமான ரெனால்ட் விரைவில் அதன் பிராண்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

Dacia spring ev

இது டாசியா ஸ்பிரிங் இவி-யைக் காட்டிலும் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால்தான் இந்தியர்களின் கவனத்தையும் இந்த வாகனத்தின் வெளியீடு மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது. ரெனால்ட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இன்னும் சில மாதங்களில் அல்லது ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் ஓர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரு இருப்பதாக உறுதியாகி இருக்கின்றது.

மேலும், நிறுவனம் ஏ செக்மெண்டில் மட்டும் இரண்டு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த இரண்டில் ஒன்றாகவே தற்போது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் டாசியா ஸ்பிரிங் இவி இருக்கப் போகின்றது. டாசியா நிறுவனம் இந்த காரை புதுமுக டஸ்டர் எஸ்யூவி தழுவி உருவாக்கி இருக்கின்றது.

Dacia spring ev interior

இதனால்தான் மினி டஸ்டரைப் போல் ஸ்பிரிங் இவி காட்சியளிக்கின்றது. குறிப்பாக, 2024 டாசியா ஸ்பிரிங் இவி மிகவும் சூப்பரான மற்றும் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் அது காட்சியளிக்கின்றது. அத்துடன் மனம் கவரும் தோற்றம் கொண்டதாகவும் அது காட்சியளிக்கின்றது. இந்த அழகிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அதன் அலாய் வீல்கள் உள்ளன.

இந்த வீல்கள் புதிய டிசைனில் கருப்பு நிறத்தில் மிகவும் அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன. இதுபோல் எந்த பக்கம் பார்த்தாலும் டாசியா ஸ்பிரிங் இவி மிகவும் அழகாகவேக் காட்சியளிக்கின்றது. அந்தளவிற்கு மிக சிறப்பான மெனக்கெடுதலைப் போட்டே நிறுவனம் அக்காரை (டாசியா ஸ்பிரிங் இவி-யை) புதுப்பித்து இருக்கின்றது.

Dacia spring ev rear

காரின் பின் பக்க லைட் செட்-அப், பின் பக்க பம்பர், பிள்ளர்கள், பக்கவாட்டு டோரில் கருப்பு நிற கிளாடிங், பெரிய கருப்பு நிற பட்டையில் டாசியா எனும் பெயர், முன் பக்க கிரில், தனித்துவமான ஹெட்லைட் மற்றும் ஏர் இன்டேக்குடன் கூடிய பம்பர் ஆகியவை 2024 டாசியா ஸ்பிரிங் இவிக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்திருக்கின்றன.

குறிப்பாக, ஒய் வடிவத்தில் உள்ள முன் மற்றும் பின் பக்க லைட்டுகள் கண்களை மட்டுமல்ல மனதையும் சேர்ந்து கவர்ந்திழுக்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த காரின் உட்பக்கம் இன்னும் மாடர்னானதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. 10 அங்குல ஃப்ளோட்டிங் திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இதனை உறுதிப்படுத்தும் விதமாக டாசியா ஸ்பிரிங் இவி பெற்றிருக்கின்றது.

இத்துடன், 7 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, ஏசி வெண்ட், டிரான்ஸ்மிஷன் செலக்டர் மற்றும் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு ஆகியவற்றையும் இந்த கார் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்டோரேஜுக்காக இதன் பான்னெட் மற்றும் பூட் பகுதியில் இட வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

பான்னெட்டில் 35லிட்டரும், பூட்டில் 308லிட்டர் அளவுள்ள பொருளையும் ஸ்டோரேஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாசியா ஸ்பிரிங் இவி-யில் ஓர் முழு சார்ஜில் 220கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதற்காக 26.8kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே டாசியா அதில் பொருத்தி இருக்கின்றது. மேலும், 11kW மற்றும் 30 kWடிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காருக்கான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆனால், ரெனால்ட் இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வரும்போது இந்திய சந்தைக்கு ஏற்றதாகவே விற்பனைக்குக் கொண்டு வரும். இதனடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் அக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. ரெனால்ட் க்விட் இவி விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் சிட்ரோன் இவி மற்றும் டியாகோ இவிக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 20:35 [IST]
English summary
Most expected 2024 dacia spring ev unveiled globally
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X