இந்த கார்களை வாங்கிட்டீங்க சமூகத்துல மிக பெரிய அந்தஸ்து கிடைச்சிரும்.. இவைதான் உலகின் காஸ்ட்லியான கார்கள்!
இவ்ளோ அதிக விலையில் ஆடம்பர கார்கள் இந்த உலகத்துல விற்பனைக்குக் கிடைக்குதா!.. என ஆச்சரியமாக கேட்கும் அளவிற்கு மிக மிக உயர்ந்த விலையில் சொகுசு கார் மாடல்கள் சில இந்த உலகில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆமாங்க, நம்ப முடியாததாக அதன் விலைகள் உள்ளன. அப்படி என்ன விலையில் அவை விற்கப்படுகின்றன? உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல் எது? அதன் முக்கிய சிறப்பம்சங்கள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
குறிப்பாக, உலகின் மிக அதிக விலையில் விற்கப்படும் டாப் 10 கார் மாடல்களைப் பற்றியும், அவற்றின் விலையைப் பற்றிய தகவலையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இதுதவிர அவற்றின் அதிக விலைக்கான காரணம் மற்றும் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

01. ரோல்ஸ் ராய்ஸ் லா ரோஸ் நோய்ரே டிராப் டெயில் (Rolls-Royce La Rose Noire Droptail): இதுவே உலகின் மிக மிகவும் காஸ்ட்லியான சொகுசு கார் மாடல் ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 249.48 கோடி ரூபாக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. நம்ப முடியாத வியக்கதக்க பல்வேறு வசதிகளை இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதனாலேயே இதற்கு இந்த அளவிற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய இந்த கார் மாடலில் 6.75 லிட்டர் வி12எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 601குதிரை திறனையும், 840என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
02. ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் (Rolls-Royce Boat Tail): உலகின் மிகவும் விலை உயர்ந்த கார் மாடல்களின் பட்டியலில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பே இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கின்றது. இந்த காரின் விலையே 233.39 கோடிகள் ஆகும். இந்த உலகத்திலேயே மிக மிக அதிக விலையைக் கொண்ட காரும் இதுவே ஆகும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி அன்றே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. நான்கு பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், இந்த காரில் சின்ன பார்ட்டியையேக் கொண்டாடிக் கொள்வதற்கான வசதிகளை தயாரிப்பு நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
பெரிய குடை, குட்டி குளிர்சாதன பெட்டி, பானங்களை தாங்கிக் கொள்வதற்கு ஏதுவான மர மேசைகள் என ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை இந்த கார் தாங்கி இருக்கின்றது. இந்த காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சொகுசு கப்பல் போன்ற காரில் நான்கு பேர் வரை பயணிக்க முடியும்.
03. (Bugatti La Voiture Noire): இந்த கார் அறிமுகமான 2019 மார்ச் மாதத்தில் ஆகும். இந்த உலகின் இரண்டாவது மிகவும் அதிக விலைக் கொண்ட கார் மாடல் இதுவாகும். மேலும், அதிக வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர் வகை கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.
இந்த காரில் அதிக பவர்ஃபுல் குவாட் டர்போ 8 லிட்டர் டபிள்யூ16 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் 1,479 குதிரை திறனை வெளியேற்றக் கூடியது ஆகும். மேலும், இதனால் 1,600 என்எம் டார்க் வரை வெளியேற்ற முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கியதே இந்த கார் மாடல் ஆகும்.
குறிப்பாக, புகாட்டி எனும் ஒளிரும் இலுமினிடேட்டர் காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது தவிர, லக்சூரி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பலதரப்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த காரின் விலை ரூ. 155.80 கோடிகள் ஆகும்.
04. பகானி ஜோன்டா எச்பி பர்செட்டா (Pagani Zonda HP Barchetta): இந்த கார் மாடலின் ஒரே யூனிட் மட்டுமே ரூ. 142.37 கோடிக்கு விற்கப்படுகின்றது. இந்த விலைக்கு அக்காரில் அப்படி என்ன இருக்கின்றது என நீங்கள் கேட்கலாம். அதீத ஆற்றலையும், கவர்ச்சியான தோற்றத்தையும், மிகவும் உறுதியான உடல் அமைப்பையும் மற்றும் அட்வான்ஸ்டு அம்சங்களைத் தாங்கியிருப்பதாலுமே இந்த காரின் விலையும் மிக மிக அதிகமாக உள்ளது.
இது ஓர் அரிய வகை சூப்பர் கார் மாடலும் ஆகும். ஒட்டுமொத்தமாகவே மூன்று யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் மாடல் தயார் செய்யப்பட்டது. அதில் பகானி நிறுவனமே அதன் சொந்த பயன்பாட்டிற்காக வைத்துக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 350கிமீ ஆகும். இந்த காரில் மெர்சிடிஸ் பென்ஸ் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 800பிஎஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
05. எஸ்பி ஆட்டோமோட்டிவ் சாவோஸ் (SP Automotive Chaos): உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கும் கார் மாடலின் விலை 120.60 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடிய ஓர் கார் மாடலே எஸ்பி ஆட்டோமோட்டிவ் தயார் செய்திருக்கும் சாவோஸ் ஆகும்.
இந்த காரை இரண்டு விதமான வெர்ஷன்களில் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சாவோஸ் எர்ச் வெர்ஷன் 2,048 குதிரை திறனுடனும், ஜீரோ கிராவிட்டி வேர்ஷன் குவாட்ரோ டர்போ வி-10 மோட்டாருடனும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த கார்கள் மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை ஆகும்.
மேலும், வெறும் 1.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய அதீத ஆற்றலையும், இந்த அதீத ஆற்றலை நொடிப்பொழுதில் கன்ட்ரோல் செய்யும் திறனைக் கொண்டிருப்பதாலும் இந்த காரின் விலை பல கோடி ரூபாயைக் கொண்டதாக இருக்கின்றது.
06. ரோல்ஸ் ராய்ஸ் ஸ்வெப்டெயில் (Rolls Royce Sweptail): 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார்களுக்கு புத்துயிர் அளிக்கக் கூடிய மாடலாகவே இந்த கார் மாடல் இருக்கின்றது. அதேவேளையில், காருக்குள் இடம் பெற்றிருக்கும் அம்சங்களோ மிகவும் அட்வான்ஸ்டானதாக உள்ளது.
தொடர்ந்து மிகுந்த கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் காராகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் பிரஷ்டு அலுமினியம் பேந்தியன் கிரில் ஆகியவை உள்ளன. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே 108.87 கோடி ஆகும்.
07. புகாட்டி சென்டோடைசி (Bugatti Centodieci): இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே 73.78 கோடி ஆகும். இந்த விலைக்கு ஏற்ப மிகுந்த கவர்ச்சியான வசதிகளையும், உருவத்தையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. புகாட்டி நிறுவனத்தின் 110 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த கார் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. வெறும் 10 யூனிட்டுகள் மட்டுமே இந்த கார் மாடல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
08. மெர்சிடிஸ் மேபேக் எக்செலெரோ (Mercedes Maybach Exelero): இதன் கான்செப்ட் 2004 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே பலரின் கவனத்தை இந்த கார் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது 690 குதிரை ஆற்றலையும், 1,020 என்எம் டார்க்கையும் இது வெளியேற்றும். இதன் ஒட்டுமொத்த எடை 2,660 கிலோ ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 351 கிமீ ஆகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 67 கோடி ஆகும்.
09. பகானி ஹுவேரா கோடலுங்க (Pagani Huayra Codalunga): இந்த உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் கவர்ச்சியான கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் மாடல் தயாரிக்கப்பட்டது. வெறும் 5 யூனிட்டுகள் மட்டுமே இது தயாரிக்கப்பட்டன.
கிளாசிக் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு விதமான தோற்றத்தையும் இந்த கார் மாடல் கொண்டிருப்பதே அதன் தனி சிறப்பாகும். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் வி12 எஞ்சினானது 828 குதிரை ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் விலை ரூ. 61.93 கோடி ஆகும்.
10. புகாட்டி டிவோ (Buggati Divo): இந்த பட்டியலின் மிகவும் விலை குறைவான கார் மாடலாக புகாட்டி டிவோவே இருக்கின்றது. இதற்கு ரூ. 46.06 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. புகாட்டி பிராண்டின் பிரபல கார் மாடலான சிரோன் உடன் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த கார் மாடல் பகிர்ந்துக் கொள்கின்றது.
ஆனால், இது மிகவும் இலகுவான காராக இருக்கின்றது. இலகுவான சக்கரங்கள், கார்பன் ஃபைபர் பேனல்கள், இன்டர்கூலர் மற்றும் ஒலியை குறைக்கும் அம்சம் என பல்வேறு சிறப்புகளை இந்த கார் மாடல்கள் கொண்டிருக்கின்றன. இதுதவிர, தனித்துவமான ஏரோடைனமிக் தோற்றத்தையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த பத்து கார் மாடல்களே இந்த உலகின் மிகவும் விலை உயர்ந்த டாப் 10 காஸ்ட்லியான கார் மாடல்கள் ஆகும். இந்த கார் மாடலில் ஏதேனும் ஒன்றை பார்த்தாலும் உலக அதிசயத்தை பார்த்ததற்கு சமம் ஆகும். அந்த அளவிற்கே மிகவும் குறைவான எண்ணிக்கையில் அவை தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








