மஹிந்திராவை இந்த விஷயத்தில் அடிச்சிக்க ஆளே இல்ல!! ஹூண்டாய் கார் கூட அடுத்துதான் இருக்கு...

இந்தியாவில் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் என்றால் என்ன? இந்தியாவில் விற்பனையில் உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் என்னென்ன என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களை வாங்கவே நிறைய பேர் விரும்புகின்றனர். கம்பீரமான நிமிர்ந்த உடலமைப்பை பெறுவது மட்டுமின்றி, எஸ்யூவி கார்களில் உட்புறத்தில் விசாலமான இடவசதி கிடைக்கிறது. இதனாலேயே சமீப ஆண்டுகளாக எஸ்யூவி கார்களை கஸ்டமர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். எஸ்யூவி கார்கள் பல்வேறு உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

most sold mid-size suv cars

மிட்-சைஸ் எஸ்யூவி அவற்றுள் ஒன்றாகும். ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு அடுத்து, பெரிய உடல் தோற்றத்தை கொண்ட கார்களாக மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விளங்குகின்றன. பொதுவாக, மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் நீளம் ஆனது 4.3 மீட்டர்களில் இருந்து 4.7 மீட்டர்கள் வரையில் இருக்கும். இவ்வாறான மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் தற்சமயம் 5 மாடல்கள் விற்பனையில் உள்ளன.

அவற்றுள் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் எஸ்யூவி கார் என்றால், அது மஹிந்திராவின் ஸ்கார்பியோ ஆகும். வழக்கமாக இந்த லிஸ்ட்டில் ஹூண்டாயின் கிரெட்டா தான் முதலிடம் பிடிக்கும். ஆனால், கடந்த 2024 ஜனவரி மாத விற்பனையில், கிரெட்டா கார்களின் விற்பனை சரிந்துள்ளது, அத்துடன் ஸ்கார்பியோ கார்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 14,293 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

most sold mid-size suv cars

அதுவே 2023 ஜனவரி மாதத்தில் வெறும் 8,715 ஸ்கார்பியோ கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்தியாவில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது 64% அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் ஸ்கார்பியோ-என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் என இரு விதமான மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் 14,293 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஸ்கார்பியோவுக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகியின் கிராண்ட் விட்டாரா உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 13,438 கிராண்ட் விட்டாரா கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 8,662 கிராண்ட் விட்டாரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

most sold mid-size suv cars

2023 ஜனவரியில் இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தை பிடித்து இருந்த ஹூண்டாய் கிரெட்டா இந்த வரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த மாதத்தில், அதனை காட்டிலும் 12% குறைவாக 13,212 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

இருப்பினும் இந்தியாவின் டாப்-3 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுள் கிரெட்டாவும் ஒன்றாக உள்ளது. இதற்கடுத்து 4வது இடத்தில், மஹிந்திராவின் மற்றொரு மிட்-சைஸ் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700 7,206 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இந்த மஹிந்திரா காரின் விற்பனையும் 2023 ஜனவரி மாதத்தில் குறைவாகவே பதிவாகி இருந்தது. கடைசி இடத்தில் கியா செல்டோஸ் 6,391 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

most sold mid-size suv cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் அளவில் பெரியதாக இருப்பதினால், அவற்றின் விலையும் கொஞ்சமாக அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், மஹிந்திரா அதிக வருவாயை ஈட்டுகிறது. ஹூண்டாயின் கிரெட்டாவின் புதிய 2024 வெர்சன் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆதலால், கிரெட்டா கார்கள் விற்பனை வரும் மாதங்களில் மீண்டும் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 10, 2024, 22:43 [IST]
English summary
Most sold mid size suv cars in india in 2024 january check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X