டாடாவை அலறவிட தயாராகும் தமிழக நிறுவனம்! என்னது இந்த வாகனங்களை முருகப்பா குழுமம் தயாரிக்க போகுதா!!

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் முருகப்பா குழுமம் (Murugappa Group). இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் டிவோல்ட் எலெக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ் (TIVOLT Electric Vehicles)-ம் ஒன்றாகும். டிஐ கிளீன் மொபிளிட்டி (TI Clean Mobility) நிறுவனத்தின் துணை நிறுவனமாக இது இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும்.

ஏற்கனவே இந்த நிறுவனம் மோந்த்ரா எலெக்ட்ரிக் எனும் பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சூப்பர் ஆட்டோ எனும் எலெக்ட்ரிக் ஆட்டோவை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்டோவை தன்னுடைய தனிப் பயன்பாட்டிற்காக ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு வாங்கி அண்மையில் வாங்கியிருந்தார்.

Montra electric scv

மிகவும் சூப்பரான மற்றும் தனித்துவமான தோற்றம் மற்றும் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய ஓர் எலெக்ட்ரிக் ஆட்டோவே இதுவாகும். இந்த நிலையிலேயே, முருகப்பா குழுமம் எலெக்ட்ரிக் ஆட்டோவைத் தொடர்ந்து விரைவில் மற்றுமொரு எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்முறை சிறிய வகை வர்த்தக வாகனங்களையே தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் வாயிலாக டாடா மோட்டார்ஸ்க்கு அது மிகப் பெரிய போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எலெக்ட்ரிக் ஆட்டோ பிரிவில் களமிறங்கியதன் வாயிலாக மஹிந்திரா டிரியோ, பஜாஜ் ஆர்இ இ டெக் மற்றும் பியாஜியோ அபே சிட்டி உள்ளிட்டவற்றிற்கு போட்டி நிறுவனமாக அது மாறிய நிலையில், தற்போது மின்சார சிறிய வர்த்தக வாகன பிரிவில் களமிறங்கி டாடா மோட்டார்ஸ்க்கு மிகப் பெரிய போட்டியாக அது மாற இருக்கின்றது.

Montra electric scv soon

நிறுவனம் தயாரிக்க இருக்கும் மின்சார சிறிய வர்த்தக வாகனம் இந்தியாவின் வர்த்தக துறையின் தேவையை மிகப் பெரிய அளவில் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, டெலிவரி பிரிவில் இப்போதைய நிலவரப்படி மிகப் பெரிய அளவில் மின்சார வாகனங்களின் தேவை வளர்ந்துக் காணப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலை உணர்ந்தே முருகப்பா குழுமம் மின்சார சிறிய வர்த்தக வாகன உற்பத்தி திட்டத்திற்கான பிளானை போட்டுள்ளது. தங்களுடைய தயாரிப்பு மிக சிறந்த தொழில்நுட்பங்கள், டிசைன், திறனை வெளியேற்றும் வசதி, நீடித்து உழைக்கும் திறன் உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களை தயாரிப்பதற்கு என்றே தொடங்கப்பட்ட நிறுவனமே டிஐசிஎம்பிஎல் ஆகும். 2022 பிப்ரவரியிலேயே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிலையிலேயே தன்னுடைய தயாரிப்பு பிரிவை விரிவாக்கம் செய்யும் பொருட்டு மோந்த்ரா பிராண்டில் டிஐசிஎம்பிஎல் புதிதாக சிறிய வர்த்தக எலெக்ட்ரிக் வாகனத்தை உற்பத்தி செய்ய இருக்கின்றது.

இது மோந்த்ரா சூப்பர் ஆட்டோ உடன் இணைந்து சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். நவீன யுகத்திற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா ஆகும். இதில் ஓர முழு சார்ஜில் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். அதிக இட வசதியைக் கொண்ட எலெக்ட்ரிக் ஆட்டோவும் இதுவாகும்.

இதன் பூட் ஸ்பேஸும் பெரியதே ஆகும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 10 கிலோவாட் வரை பவரை வெளியேற்றும். மேலும், 60என்எம் டார்க் வரை வெளியேற்றும். இபிஎக்ஸ், இபிவி மற்றும் இபிவி 2.0 ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அனைத்தும் மெட்டல் பாடி கொண்டவை ஆகும். அதேவேளையில், இபிஎக்ஸ் மட்டுமே ஹார்ட் டாப்பை கொண்டிருக்கும். மற்றவை ரெக்கின் கேனோபியைக் கொண்டிருக்கும். 7.66 kWh மற்றும் 10 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகள் இந்த ஆட்டோவில் வழங்கப்படுகின்றது. இதைப்போலவே நவீன வசதிகளயைும், அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாகவும் மோந்த்ரா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் சிறிய வர்த்தக வாகனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் மின்சார வர்த்தக வாகன தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக நிறுவனம் இந்த பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் வாயிலாக டாடா மோட்டா்ர்ஸுக்கு இது மிகப் பெரிய போட்டியாக மாற இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 11:55 [IST]
English summary
Murugappa group planning to launch e scv here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X