30 கி.மீ மைலேஜ் தரும் கார் இந்த மாசமே அறிமுகமாகுதா? இன்னும் எத்தனை கார் வருது தெரியுமா?
பிப்ரவரி மாதம் பிறந்து விட்ட நிலையில் தற்போது இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கார்கள் எல்லாம் அறிமுகமாக உள்ளன. இப்படியாக 5 முக்கிய கார்கள் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாகிறது. சில கார்கள் விற்பனைக்கு வருகிறது. சில கார்கள் முதல் முறையாக காட்சிக்கு வருகிறது. இப்படியாக இந்த மாதம் வெளியாக உள்ள கார்களை பற்றி காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் கிரெட்டா என்லைன்: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரட்டா காரில் ஃபேஸ்லிஃப்ட வேரியன்டை கடந்த மாதம் வெளியிட்டது. தற்போது அந்நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் ஸ்போர்டியர் வெர்ஷனான கிரெக்ட்டா என்லைன் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதில் புதிய கலர் ஸ்கிரீன்கள் இடம்பெறும் முக்கியமாக ஆங்காங்கே ரெட் ஆக்ஸண்ட்கள் இடம் பெறுகிறது. இது கண்களை கவரும் வகையில் இருக்கும்.

இது 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9 நொடியில் பிக்கப் செய்து விடும் என எதிர்பார்க்கலாம்.
மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் : கடந்த 2023-ம் ஆண்டு ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸூகி ஸ்விப்ட் கார் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காராக இந்திய மார்க்கெட் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த காரின் தயாரிப்பு குஜராத் மாநிலத்தில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில் இம்மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்னிட்டு மாருதி நிறுவனம் இந்த காரை இந்த மாதமே காட்சிப்படுத்த அதிகமான வாய்ப்பு உள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மூன்று சிலிண்டர் கொண்ட இன்ஜினாகும் இந்த கார் மைல்டு ஹைபிரிட் கொண்ட காராக தயாரிக்கப்படுகிறது.
இதை 83 பி எஸ் பவரையும் 108 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. மிக முக்கியமான ஹைலைட்டே இந்த காரின் மைலேஜ் தான். தற்போது உள்ள மைலேஜை விட இந்த காரில் மைலேஜ் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் கார் என்பதால் லிட்டருக்கு 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட்: மஹிந்திரா நிர்வாகம் தனது எக்ஸ்யூவி 300 காரை பேஸ்லிஃப்ட் செய்து தயாரிப்புக்கு ரெடியாக வைத்துள்ளது. இந்த கார் இந்த மாதம் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் முக்கியமாக சி வடிவ எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டுகள் பின்பக்கம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி டி ஆர் எல் பார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் உள்ள மற்றொரு முக்கிய அப்டேட்டாக இதன் உட்புறங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களை கவரும் வகையில் இருக்கும்.
டாடா டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி: டாடா நிறுவனம் இந்தியாவின் முதல் சிஎன்ஜி பவரின் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட காரை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி தனது டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆட்டோமெட்டிக் கியர் காரை இந்நிறுவனம் இந்த மாதம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. ரூபாய் 21,000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்ய முடியும்.
டியாகோ ஐசிஎன்ஜி ஏஎம்டி காரில் எக்ஸ்டிஏ, எக்ஸ்இசட்ஏ ப்ளஸ், எக்ஸ்இசட்ஏ என்ஆர் ஜி ஆகிய வேரியான்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியண்டுகள் தான் தற்போது சிஎன்ஜி ஆப்ஷன் கொண்ட வேரியன்டுகளாக விற்பனையில் உள்ளன. இதில் நிச்சயம் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா 2024: ஸ்கோடா நிறுவனம் தனது 2024 ஆக்டேவியா காரை சர்வதேச அளவில் இந்த மாதம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஸ்னீக்பீக்கையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இதன் புதுப்பிக்கப்பட்ட மாடல் முன்பக்கம் மற்றும் பின்பக்க டிசைன் ஆகியவை மறுபடியும் இப்ப செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மீது சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த காரின் இஞ்சின் ஆப்ஷனை பொறுத்தவரை பழைய காரில் உள்ள அதே ஆப்ஷன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இந்த காரின் உட்புற கட்டமைப்புகள் சற்று சொகுசு வசதி நிறைந்ததாகவும் கூடுதல் அம்சங்கள் நிறைந்ததாகவும் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வருகை நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்டியலில் மொத்தம் உள்ள ஐந்து கார்களில் மூன்று கார்கள் இந்திய சாலையில் இந்த மாதமே ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாக்கி உள்ள இரண்டு கார்கள் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மக்கள் மத்தியில் இந்த கார்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த மாதம் நீங்கள் இந்த பட்டியலில் எந்த காரை அதிகம் விரும்புகிறீர்கள் என கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









