பைக் மாதிரி மைலேஜ் தரப்போகும் டிசையர் கார் ரெடி! எப்ப அறிமுகம் தெரியுமா?

மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக தனது டிசையர் காரை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில் அறிமுகமான ஸ்விஃப்ட் காரின் அப்டேட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தான் தற்போது 4ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வந்த ஹார்ட்ரேட் பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது. இந்த காரின் அப்டேட்டுக்காக இந்த பிளாட்ஃபார்மையே அந்நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இதுதான் தற்போது புதிய கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

maruti new dzire 2024

புதிதாக செய்யப்பட்ட அப்டேட்டில் காரின் அளவுகள் இன்ஜின் காரில் உள்ள அம்சங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல இந்த காரின் இன்ஜின் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால், இதன் மைலேஜ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே இன்ஜின் உடன் தற்போது மாருதி நிறுவனம் தனது டிசையர் காரையும் அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டு வருகிறது.

ஸ்விஃப்ட் கார் அப்டேட் செய்யப்பட்டால் டிசையர் காலம் அப்டேட் செய்யப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஸ்விஃப்ட் காரை பொருத்தவரை மக்கள் மத்தியில் பிரபலமாக காராக மட்டுமல்லாமல் அதே நேரத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இதனால் இதன் அப்டேட்டை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

maruti new dzire 2024

புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வெளியாக போகும் டிசையர் காரை பொறுத்தவரை ஸ்விஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே புதிய இன்ஜின் தான் அந்த காரிலும் பொருத்தப்படுகிறது. இன்ஜின் மட்டுமல்லாமல் பல்வேறு டிசைன் அம்சங்களும் இந்த காரில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்விஃப்ட் கார் எப்படி எல்லாம் அப்டேட் செய்யப்பட்டுள்ளதோ அதேபோல டிசையர் காரும் அப்டேட் செய்யப்படுகிறது.

ஸ்விஃப்ட் காரை பொறுத்தவரை தற்போது மேனுவல் கியர் ஆப்ஷனில் 25.75 கிலோமீட்டர் மைலேஜ், ஏஎம்டி கியர் ஆப்ஷனில் 24.8 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டிசையர் காரும் தற்போது தரும் மைலேஜ் விட அதிகமான மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம். இதனால் வாங்குபவர்களுக்கு பெட்ரோல் செலவு என்பது குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maruti new dzire 2024

புதிய ஸ்விஃப்ட் காரில் செய்யப்பட்டுள்ள அப்டேட்டுகள் பல டிசையர் காரில் வருவது போல கூடுதலாக 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி உடனும், இதுபோக வயர்லெஸ் போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட்கள், ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், புதிய சீட் கவர் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்கள் இடம் பெறுகிறது.

இதுபோக இந்த காரில் பின்பக்க கேமரா புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் பவர் அட்ஜஸ்டபிள் போல்டிங் விங் மிரர் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்காக 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார், ஐஎஸ்ஓ பிக்ஸ் ஆங்கர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இடம்பெறுகிறது. இது எல்லாம் ஸ்விஃப்ட் காரிலும் இடம் பெற்ற அம்சங்கள் தான்.

இந்த காரும் அப்டேட் செய்யப்பட்ட ஹார்ட்ரேட் பிளாட்பார்மில் உருவாக்கப்படுவதால், இதில் புதிதாக பல்வேறு கலர் ஆப்ஷன்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்பக்கம் உள்ள கிரில் பகுதி பெரிதாகவும் மறுவிடிவமைப்பு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பம்பர்கள் பேனட் உள்ளிட்ட அம்சங்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. புதிய அலாய் வீல்கள் அப்டேட் செய்யப்பட்ட கதவு மற்றும் பில்லர்களும் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. அதன் ரசிகர்களை வரவேற்க வைத்துள்ளது. பலர் இந்த அப்டேட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், இந்த அப்டேட்டை நிறுவனம் செய்துள்ளது. தற்போது டிசையர் காரையும் அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது. விரைவில் இந்த காரும் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதில் முக்கியமான சிறப்பு அம்சமே இதன் மைலேஜாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 12:47 [IST]
English summary
New gen dzire to share engine and features with the new swift
மேலும்... #Maruti Dzire 2024 #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X