இந்த கார் எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்க போகுதா! டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் தலையில் இடியை இறக்க போறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஜீப் காம்பஸ் (Jeep Compass). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஜீப் நிறுவனத்தின் முதுகெலும்பாக காம்பஸ் கார் திகழ்கிறது. இதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் வகையில், காம்பஸ் காரின் புதிய தலைமுறை மாடலை, ஜீப் நிறுவனம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. வரும் 2027ம் ஆண்டில், ஜீப் காம்பஸ் காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜீப் காம்பஸ் கார் தற்போதைய நிலையில் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் புதிய தலைமுறை மாடலில், டீசல் இன்ஜின் உடன், பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே எலெக்ட்ரிக் வெர்ஷனும் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜீப் காம்பஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில், 98 kWh பேட்டரி ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். மறுபக்கம் பெட்ரோல் இன்ஜின் ஆனது, டர்போ சார்ஜர் உடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீப் காம்பஸ் காரின் தற்போதைய மாடலை விட, புதிய தலைமுறை மாடல் அளவில் பெரியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும். இதுதவிர பல்வேறு புதிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் டிசைனும் மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஜீப் காம்பஸ் காரின் ஆரம்ப விலை 18.99 லட்ச ரூபாயாக உள்ளது. இது முன்பு 20.69 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் சமீபத்தில்தான் ஜீப் நிறுவனம் காம்பஸ் காரின் ஆரம்ப விலையை அதிரடியாக குறைத்தது. 1.70 லட்ச ரூபாய் வரை ஆரம்ப விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை தற்போதைய நிலையில் 28.33 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், புதிய தலைமுறை மாடலின் விலை இதை விட அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சஃபாரி (Tata Safari), டாடா ஹாரியர் (Tata Harrier), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) ஆகிய கார்கள்தான், ஜீப் காம்பஸ் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களாக உள்ளன.
இந்த கார்களுக்கு எல்லாம், ஜீப் காம்பஸ் காரின் புதிய தலைமுறை மாடலின் வருகை, விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஜீப் காம்பஸ் தற்போதைய நிலையிலேயே பிரீமியமான காராகதான் உள்ளது. ஆனால் இதன் புதிய தலைமுறை மாடல் இன்னும் பிரீமியமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








