இந்த காரை வாங்கீட்டா இடம் இல்லன்னு யார்ட்டயும் பொய் சொல்ல முடியாது! கப்பல்ல போற மாதிரி மெதந்து கிட்டு போகலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த கியா கார்னிவல் காரின் விற்பனை, கடந்த 2023ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால் கார்னிவல் கார் வெகுவாக அப்டேட் செய்யப்பட்டு, இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கியா நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடல், வரும் அக்டோபர் 3ம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக புதிய தலைமுறை கியா கார்னிவல் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை கியா கார்னிவல், மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், முன்பதிவு தொகை 2 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024 Kia Carnival

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, புதிய தலைமுறை கார்னிவல் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது இந்த காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை மாடலில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும். அது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 192 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும். அத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

2024 Kia Carnival Interior

புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் வழங்கப்பட்டுள்ள 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் கவனம் ஈர்க்கும் விஷயமாக உள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர இன்னும் பல்வேறு வசதிகளையும், புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் கொண்டுள்ளது.

இதில், 11 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 12 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ட்யூயல் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ், 8 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கார். எனவே அதிகம் பேர் பயணம் செய்ய முடியும். இந்த காரின் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகளும், 3வது வரிசையில் பென்ச் இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அனேகமாக புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் ஆரம்ப விலை 40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

எனவே வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் போன்றவர்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் ஏற்றதாக இருக்கும். தொலைதூர பயணங்களை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள முடியும் என்பதால், இவர்கள் எல்லாம் கியா கார்னிவல் காரின் வாடிக்கையாளர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2024, 20:59 [IST]
English summary
New gen kia carnival bookings open all details here
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+