காரா? இல்ல ரோட்ல ஓட்ற உல்லாச கப்பலா? டொயோட்டா இன்னோவா சோலி முடின்ச்! நாளைக்குதான் உண்மையான தீபாவளி!

இந்தியாவில் உள்ள கியா (Kia) நிறுவனத்தின் ரசிகர்களுக்கு, நாளைதான் (அக்டோபர் 3) உண்மையான தீபாவளி. ஏனெனில் கியா நிறுவனம் நாளை, 2 புத்தம் புதிய கார்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அவை புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival) மற்றும் கியா இவி9 (Kia EV9) ஆகியவை ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த 2 புத்தம் புதிய கார்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை கியா கார்னிவல்: இந்த காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம். இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். புதிய தலைமுறை கியா கார்னிவல், சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

2024 Kia Carnival

ட்யூயல் சன்ரூஃப்கள், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems). 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் முக்கியமான வசதிகளாக (Features) இருக்கலாம்.

இது அதிகம் பேர் பயணம் செய்வதற்கு ஏற்ற சொகுசு கார் ஆகும். நிறைய பிரீமியமான அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்பதால், விலையும் அதிகமாகவே இருக்கும். அதாவது 40-50 லட்ச ரூபாய் என்ற அளவில் இதன் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia EV9

இருப்பினும் விலை எவ்வளவு? என்பதற்கு தெரிவதற்கு முன்பே, இந்த காரை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கலாம் என்றாலும் கூட, புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் வருகை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) போன்ற கார்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

கியா இவி9: இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். 99.8 kWh பேட்டரி ஆப்ஷன், கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 561 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்த சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) உடன், பல்வேறு அதிநவீன வசதிகளையும் இந்த கார் கொண்டிருக்கும்.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே கியா இவி6 (Kia EV6) என்ற எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 65.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆனால் இதை விட அதிக விலையில்தான் கியா இவி9 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும். அனேகமாக இந்திய சந்தையில் கியா இவி9 எலெக்ட்ரிக் காரின் விலை, சுமார் 90 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். புதிய தலைமுறை கியா கார்னிவல், கியா இவி9 ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை பற்றிய அனைத்து அதிகாரப்பூர்வமான தகவல்களும், நாளை நமக்கு தெரியவந்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை கியா கார்னிவல் மற்றும் கியா இவி9 ஆகிய 2 கார்களும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாது. மாறாக முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன. எனவே அவற்றின் விலை மிகவும் அதிகமாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 2, 2024, 22:50 [IST]
English summary
New gen kia carnival kia ev9 india launch tomorrow expected price features
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+