கார்ல போறமா இல்ல கப்பல்ல போறமானு டவுட் வர வெச்சிரும்! இந்த காரை மறுபடியும் கொண்டு வந்துட்டாங்களா! கொல மாஸ்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விற்பனை, கடந்த 2023ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், கியா கார்னிவல் கார் இந்திய சந்தையில் தற்போது புதிய அவதாரத்தில் 'கம்பேக்' கொடுத்துள்ளது. ஆம், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival) கார், இன்று (அக்டோபர் 3) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது சொகுசு எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் என்பதால், அதற்கு ஏற்ற வகையில், ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், இதில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அத்துடன் தலா 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள ட்வின் டிஸ்ப்ளேக்களும், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இதில் ஒரு டிஸ்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.
இவை எல்லாம் தவிர, ட்யூயல் சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் உடன் 360 டிகிரி கேமரா, 12 ஸ்பீக்கர் பிரீமியம் மியூசிக் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் ஆகிய அம்சங்களும், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவர் மற்றும் 440 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) வழங்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக, காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், ஒரு ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.
அது லிமோசின் (Limousine) வேரியண்ட் ஆகும். இதன் விலை 63.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். தற்போதைய நிலையில் கியா கார்னிவல் கார், 7 சீட்டர் (2+2+3) ஆப்ஷனில் களமிறக்கப்பட்டுள்ளது. கியா கார்னிவல் காரின் விலை ஏன் மிகவும் அதிகமாக உள்ளது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், இந்தியாவில் உள்ள கியா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை. அதற்கு மாறாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாகவே விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.
ஆனால் கியா நிறுவனம் எதிர்காலத்தில், புதிய தலைமுறை கார்னிவல் காரை, இந்தியாவிலேயே 'அசெம்பிள்' செய்ய திட்டமிட்டுள்ளது. இது நடக்கும்பட்சத்தில், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் விலை ஓரளவிற்கு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கியா நிறுவனத்திடம் இருந்து விரைவில் வெளியாகலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் புதிய தலைமுறை கியா கார்னிவல் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை இந்த காரை, 2,796 பேர் முன்பதிவு செய்து விட்டனர். இது விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்னால் செய்யப்பட்ட முன்பதிவுகள் ஆகும்.
தற்போது இந்த காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. இது மிகவும் அதிகமான விலை நிர்ணயம் என்ற கருத்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காருக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








