டொயோட்டா இன்னோவா சாம்ராஜ்யத்தை சரிக்க வரும் புதிய கார்... நிறைய பேர் போக முடியும்... விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று கியா. தற்போதைய நிலையில் சொனெட், செல்டோஸ், கேரன்ஸ் மற்றும் இவி6 என மொத்தம் 4 கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. முன்பு விற்பனையில் இருந்த கியா கார்னிவல் (Kia Carnival) தற்போது விற்பனையில் இல்லை. சொகுசு வசதிகள் நிரம்பிய இந்த எம்பிவி காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய சாலைகளில் புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டுள்ளது.

டிசைன் மாற்றங்கள், புதிய வசதிகள் என பழைய மாடலை காட்டிலும் வெகுவாக அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

2024 Kia Carnival

டிசைன்: புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் முன் பகுதியில் பெரிய புலி மூக்கு க்ரில் அமைப்பு வழங்கப்படவுள்ளது. அத்துடன் புதிய பம்பர், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள் வழங்கப்படவுள்ளன. இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வரும் காரின் முன் பக்க பம்பரில், ரேடாரையும் பார்க்க முடிந்துள்ளது.

இது அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) வசதிக்கான ரேடாராக இருக்கலாம். பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்படலாம். ஒட்டுமொத்தத்தில் புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் டிசைன் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 Kia Carnival Rear Profile

வசதிகள்: புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், 3 வரிசை இருக்கை அமைப்புடன் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது அதிகம் பேர் பயணம் செய்ய ஏற்றதாக இருக்கும். இதன் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்படலாம். இந்த இருக்கை பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

அத்துடன் பழைய மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மாடல் அளவில் பெரியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளை பொறுத்தவரையில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் அடாஸ் போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

இன்ஜின்: சர்வதேச அளவில் கியா கார்னிவல் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட், 3.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இந்தியாவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 201 ஹெச்பி-ஆக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு சொகுசு எம்பிவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, புதிய தலைமுறை கியா கார்னிவல் ஏற்றதாக இருக்கும். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 30-35 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய தலைமுறை கார்னிவலின் வருகை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஹைக்ராஸ் ஆகிய கார்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 14:42 [IST]
English summary
New gen kia carnival mpv launch nears all you need to know
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+