வெறும் 24 மணி நேரத்துல இத்தன பேரா! செல்போனை 'புக்' பண்ற மாதிரி எல்லாரும் இந்த காரை 'புக்' பண்ணீட்டு இருக்காங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை கியா கார்னிவல் (New-gen Kia Carnival). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், வரும் அக்டோபர் 3ம் தேதி (October 3) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், புதிய தலைமுறை கியா கார்னிவல் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை கார்னிவல் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை கியா நிறுவனம் கடந்த செப்டம்பர் 16 (நேற்று முன் தினம்) தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாக, 1,822 பேர், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை 'புக்கிங்' செய்துள்ளனர்.

இது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஏனெனில் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். அப்படிப்பட்ட ஒரு காரை வெறும் 24 மணி நேரத்திற்கு உள்ளாக 1,822 பேர் முன்பதிவு செய்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். புதிய தலைமுறை கியா கார்னிவல் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எனவே அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, புதிய தலைமுறை கியா கார்னிவல் கார், விற்பனையில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் விலை உயர்ந்தது என்பதால், அதற்கு ஏற்ப ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced driver-assistance systems) மிகவும் முக்கியமானது. இதுதவிர 12.3 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகளும் கூட, புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் முக்கியமான வசதிகளில் ஒன்றுதான். இதில், ஒரு திரை டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும்.
அதே சமயம் மற்றொரு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இவை எல்லாம் தவிர, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 12 ஸ்பீக்கர் போஸ் மியூசிக் சிஸ்டம், ட்யூயல் சன்ரூஃப் மற்றும் பின் பகுதியில் ஸ்லைடிங் டோர்கள் ஆகிய வசதிகளும் கூட, புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், அதிகபட்சமாக 192 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன், புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், 2 லட்ச ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய தலைமுறை கியா கார்னிவல் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் விலை 40-50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross), டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto) ஆகிய கார்களுக்கு எல்லாம், விலை உயர்ந்த பிரீமியம் மாற்று ஆப்ஷனாக புதிய தலைமுறை கியா கார்னிவல் இருக்கும்.
அதே நேரத்தில் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) மற்றும் லெக்ஸஸ் எல்எம் (Lexus LM) ஆகிய கார்களுக்கு எல்லாம், விலை குறைவான மாற்று ஆப்ஷனாக புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் திகழும். வரும் அக்டோபர் 3ம் தேதி, புதிய தலைமுறை கார்னிவல் காருடன் சேர்த்து, இவி9 (EV9) காரையும் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








