30 கிமீ மைலேஜ் தரும் ஆல்டோ கார்! விலையும் தரைமட்டத்துக்கு குறைய போகுது!
இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகி வரும் ஆல்டோ காரை சுஸூகி நிறுவனம் அப்டேட் செய்து பத்தாம் தலைமுறைக்காக அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன்படி 2026ம் ஆண்டு இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த காரின் தோற்றம் முற்றிலுமாக மாற்றி அமைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படியாக இந்த காரில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
சுஸூகி நிறுவனத்தின் தலைமை இடமான ஜப்பானில் தற்போது 9ம் தலைமுறை ஆல்டோ கார் விற்பனையாகி வருகிறது. இந்த அப்டேட் கடந்த 2021ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த காரின் 10ம் தலைமுறையை அப்டேட் வரும் 2026ம் ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சுஸூகி நிறுவனம் கடந்த 1979ம் ஆண்டு தனது முதல் தலைமுறை ஆல்டோ காரை ஜப்பான் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாருதி சுஸூகி ஆல்டோ என்ற பெயரில் இந்திய மார்க்கெட்டில் 2000-வது ஆண்டு தான் விற்பனைக்கு வந்தது. ஏனெனில் பல்வேறு அப்டேட்களை இந்த கார் பெற்றுள்ளது. அடுத்த புதிய அப்டேட்டாக 10ம் தலைமுறை அப்டேட்டை விரைவில் இந்த கார் பெற போகிறது.
எதுக்காக சுஸூகி நிறுவனம் தற்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் மாடலில் இருந்து சுமார் 100 கிலோ வரை அதன் எடையை குறைப்பதற்காக அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது விற்பனையாகி வரும் கார் சுமார் 760 கிலோ இருக்கும் நிலையில் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கார் சுமார் 580 முதல் 660 கிலோ வரை மட்டுமே இருக்கும் காராக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு குறைந்த எடையில் இந்த ஆல்டோ கார் வடிவமைக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இந்த காரின் 3ம் தலைமுறை காரும் இதே 580 கிலோ எடை தான் இருந்தது. அந்த காலத்தில் கார்களில் இருந்த தொழிற்நுட்பங்கள் மிகக் குறைவு குறிப்பாக ஏர்பேக்குகள் காரில் இல்லாத காலமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலத்தில் இதெல்லாம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதால் காரின் எடையை குறைப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை.
இந்த காரை சுஸூகி நிறுவனம் தற்போது பயன்படுத்தி வரும் ஹார்ட்ரெட் பிளாட்ஃபார்மிலேயே செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக அதிக சக்தியை தாங்கும் ஸ்டீல்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோக பிளாஸ்டிக் பாகங்களின் பயன்பாட்டையும் குறைப்பதற்கான திட்டமும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எடையை குறைப்பதற்கு மிக முக்கியமான காரணம் வாகனத்தின் மைலேஜ் தான். இந்த காரை வாங்குபவர்கள் அதிக மைலேஜ் விரும்புவதால் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்டோ கார் பெட்ரோல் வெர்ஷனில் 25.2 கிலோமீட்டர் மைலேஜையும், மைல்டு ஹைபிரிட் வேரியன்ட்டில் 27.7 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. ஹைபிரிட் செட்டப்பிற்காக 12 வோல்ட் பேட்டரி செட்டப் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது 2 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய மார்க்கெட்டில் இல்லை என்றாலும் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் புதிதாக அப்டேட் செய்யப்படும் ஆல்டோ காரில் 10 கிலோ எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 30 சதவீதமான திறனை எலெக்ட்ரிக் மோட்டார் மூலமே பெரும் வகையில் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தை அப்டேட் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை இந்த காரில் அந்நிறுவனம் பொருத்துகிறது. இதன் மூலம் இந்த காரின் மைலேஜ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆல்டோ கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் நிச்சயம் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கார் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகி வரும் நிலையில் அப்டேட் செய்யப்பட்ட மாடலும் விற்பனைக்கு வந்தால் நிச்சயம் மக்கள் மத்தியில் சிறிய கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை சமீப காலமாக குறைந்து வந்தாலும், மக்கள் மத்தியில் இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மைலேஜ் வழங்குகின்றன. சில லட்சங்கள் மட்டுமே அதிகமாக செலவழித்தால் கொஞ்சம் பெரிய சொகுசான காரை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அந்த காரை வாங்குகிறார்கள். இதனால் சிறிய கார்கள் அதிக மைலேஜ் தரும் வகையில் வடிவமைத்தால் நிச்சயம் மக்கள் இந்த ரக கார்களை தான் விரும்புவார்கள்.


Click it and Unblock the Notifications









