34 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது.. இந்த காருக்காக எல்லாரும் பைக்கை தூக்கி போட போறாங்க!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடலை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ரூ. 6.79 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையிலேயே இந்த சப்-4 மீட்டர் செடான் ரக கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலின் டெலிவரி பணிகளையே தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக வாடிக்கையாளர்கள் காரை டெலிவரி பெறும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கார் மாடல்களில் டிசையர்-ம் ஒன்றாகும். 16 ஆண்டுகளாகவே இந்த கார் மாடல் விற்பனையில் இருக்கின்றது. மேலும், இதுவரை 27 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் இந்த கார் மாடல் விற்பனையாகி உள்ளது.

Maruti dzire delivery started

இத்தகைய கார் மாடலுக்கே புகழ் சேர்க்கும் விதமாக மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதிய தலைமுறை வெர்ஷனை தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. அதிக சிறப்புகள் வாய்ந்த கார் மாடலாக இதனை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. பாதுகாப்பு, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் என அனைத்திலும் பெஸ்ட்டான வாகனமாக இதனை மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது.

ஏன் வெளிப்புற தோற்றம் மற்றும் உள் பக்கம் இவற்றையும் சிறந்த ஒன்றாகவே மாருதி மாற்றியுள்ளது. ஆகையால், புதிய தலைமுறை வெர்ஷனுக்கும் இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. இதன் பாதுகாப்பு தரத்திற்காகவே மக்கள் அதிகளவில் இந்த காரை வாங்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

மாருதி சுஸுகி டிசையர் காரை சமீபத்தில் குளோபல் என்சிஏபி மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் அக்கார் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று குவித்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மைலேஜ் வழங்குவதிலும் இது ஓர் சிறந்த கார் மாடல் என மாருதி சுஸுகி கூறுகின்றது.

இதன் பெட்ரோல் வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கே 24.7 கிமீ முதல் 25.7 கிமீ வரையில் மைலேஜ் தரும் என கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், இதன் சிஎன்ஜி தேர்வு அதிகபட்சமாக 33.73 கிமீ வரையில் மைலேஜ் தருமாம். இது அராய் அமைப்பு சான்றளித்த மைலேஜ் விபரங்கள் என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti dzire delivery started in india

இதேபோல், இந்த காரின் லுக்கும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. மிக முக்கியமாக ஸ்விஃப்ட் காரை பிரதிபலிக்கும் வகையில் இதன் லுக் இல்லை. ஹெட்லைட், டிஆர்எல், கிரில் மற்றும் ஸ்டாப் லைட் என அனைத்தும் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. ஆகையால், நிறுவனத்தின் புத்தம் புது தயாரிப்பைபோல புதிய டிசையர் பிரதிபலிக்கின்றது.

இதை பார்ப்பவர்கள் இது டிசையர் கார் மாடல்-தானா என்று சந்தேகம் படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த அளவிற்கே அதன் வெளிப்புற தோற்றம் மாற்றப்பட்டு உள்ளது. இதேபோல், இதன் உட்பக்கத்தையும் இரண்டு நிற வேலையால் அழுகுப்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து, பெரிய 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் சன்ரூஃப் அம்சம் போன்றவற்றையும் மாருதி சுஸுகி இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது.

ஆகையால், விற்பனையில் பழைய வெர்ஷனைப் போலவே இந்த காரும் மிக அமோகமான வரவேற்பையும், பெற்றியையும் பெறும் என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மார்க்கெட்டிற்கும் ஏற்பட்டு இருக்கின்றது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர், இசட்12இ வகை பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டு ஆப்ஷன்களிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் செடான் வகை கார்களுக்கு சற்றே தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்ட்டை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளும் பொருட்டே மாருதி சுஸுகி இந்த அட்டகாசமான புதிய தலைமுறை டிசையர் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 11:39 [IST]
English summary
New gen maruti dzire sedan delivery started in india here is video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+