பைக் கம்பெனிகளை இழுத்து மூட வைக்க போகும் கார்! இவ்ளோ மைலேஜ் குடுத்தா யார்தான் பைக் வாங்குவா! விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் (New-gen Maruti Suzuki Dzire). இது தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட மாடல் ஆகும். புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், வரும் நவம்பர் 11ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின், பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன் மட்டுமே, நவம்பர் 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் சிஎன்ஜி இன்ஜின் வெர்ஷன் ஒரு சில மாதங்கள் கழித்து விற்பனைக்கு களமிறக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

New-gen Maruti Suzuki Dzire Side Design

ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் பெட்ரோல் வெர்ஷன் உடன் சேர்த்து, சிஎன்ஜி வெர்ஷனும், வரும் நவம்பர் 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷனை எதிர்பார்த்து கொண்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷனில், 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இதன் பவர் அவுட்புட் 68 பிஹெச்பி மற்றும் 101.8 என்எம் டார்க் ஆகும். இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New-gen Maruti Suzuki Dzire

இது டிசையர் செடான் ரக காரின் ஹேட்ச்பேக் உடன்பிறப்பான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வெர்ஷனை விட அதிக மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்க கூடியதாக உள்ளது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி வெர்ஷனில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும். புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷன் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படவுள்ளது. அவை VXi MT மற்றும் ZXi MT ஆகியவை ஆகும்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷனில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரியர் ஏசி வெண்ட்கள், சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படவுள்ளன.

ஆனால் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஹூண்டாய் அவ்ரா சிஎன்ஜி (Hyundai Aura CNG) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG) ஆகிய கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் சிஎன்ஜி காரின் VXi MT வேரியண்ட்டின் விலை சுமார் 8.75 லட்ச ரூபாய் என்ற அளவிலும், ZXi MT வேரியண்ட்டின் விலை சுமார் 9.50 லட்ச ரூபாய் என்ற அளவிலும் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2024, 12:44 [IST]
English summary
New gen maruti suzuki dzire cng expected price mileage variants features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+