33 கிமீ மைலேஜ் தரும் கார் இவ்ளோ கம்மியான ரேட்ல வரப்போகுதா! இந்த தீபாவளியை இந்தியா எப்பவுமே மறக்காது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் செடான் ரக கார்கள் தற்போது தங்கள் செல்வாக்கை இழந்து வருகின்றன. ஆனால் மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் செடான் ரக கார் எது என கேட்டால், மாருதி சுஸுகி டிசையர் என கண்ணை மூடி கொண்டு சொல்லலாம்.
அந்த அளவிற்கு இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும் இந்திய சந்தையில் விற்பனை எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்காக, டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு, இன்னும் ஒரு சில வாரங்களில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக புதிய தலைமுறை டிசையர் காரின் முதல் அதிகாரப்பூர்வமான டீசரை (First Official Teaser) மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த டீசரில், ''The Best Is Just The Beginning'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், நிறைய டிசைன் (Design) மாற்றங்களை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும். இந்தியாவில் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்குதான் தற்போது அதிகப்படியான வரவேற்பு காணப்படுகிறது.

எனவே எஸ்யூவி ரக கார்களை மனதில் வைத்து, புதிய தலைமுறை டிசையர் காரை மாருதி சுஸுகி நிறுவனம் டிசைன் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி புதிய ஹெட்லைட்கள், புதிய க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், சன்ரூஃப், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஸ்மார்ட் கீ மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் எல்லாம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். செயல்திறனை பொறுத்தவரையில், புதிய 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம். இதன் அதிகபட்ச பவர் அவுட்புட் 81.58 பிஎஸ் பவர் மற்றும் 111.7 என்எம் டார்க் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இதில் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியண்ட்களின் மைலேஜ் (Mileage) ஒரு லிட்டருக்கு சுமாராக 25 கிலோ மீட்டர் என்ற அளவிலும், ஏஎம்டி கியர் பாக்ஸ் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு சுமாராக 26 கிலோ மீட்டர் என்ற அளவிலும் இருக்கலாம்.
இதே இன்ஜின் ஆப்ஷன் கூடிய, மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி (CNG) மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 69.75 பிஎஸ் பவர் மற்றும் 101.8 என்எம் என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும் என்பது உறுதி.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு சுமாராக 33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடிய வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 6.57 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.34 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் புதிய தலைமுறை மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம். அனேகமாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் விலை 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருந்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் ஆரம்ப நிலை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகிய கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் வருகை, விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








