33 கிமீ மைலேஜ் தரும் காரை இவ்ளோ கம்மியான விலையில் களமிறக்க போறாங்களா! காலண்டர்ல இப்பவே தேதியை குறிச்சி வையுங்க

இந்திய சந்தையில் தற்போதெல்லாம் செடான் (Sedan) கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக வாங்குவது கிடையாது. ஆனால் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவின் வெற்றிகரமான செடான் கார் என, மாருதி சுஸுகி டிசையரை குறிப்பிடலாம். இதன் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாருதி சுஸுகி விரும்புகிறது. எனவே டிசையர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் அறிமுக தேதி (Launch Date) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் வரும் நவம்பர் 11ம் தேதி (November 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகும். எனவே வரும் நவம்பர் 11ம் தேதி மாருதி சுஸுகி டிசையர் காரை பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

Maruti Suzuki Dzire Side Design

அதற்கு முன்னதாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் என்னென்ன வசதிகள் (Features) வழங்கப்படலாம்? என்ன இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) கொடுக்கப்படும்? என்பது போன்ற தகவல்கள் எல்லாம் நமக்கு தெரிய வந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுஸுகி டிசையர் காரில் சன்ரூஃப் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்கள் எதிலும் சன்ரூஃப் வசதி கிடையாது. எனவே இந்த செக்மெண்ட்டில் சன்ரூஃப் வசதியை கொண்டுள்ள முதல் கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பெறலாம்.

Maruti Suzuki Dzire

இதுதவிர 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் கூட, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் நாம் தாராளமாக எதிர்பார்க்க முடியும். அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை எல்லாம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 80 பிஹெச்பி/112 என்எம் ஆக இருக்கலாம்.

இந்த இன்ஜின் கியர் பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து, ஒரு லிட்டருக்கு சுமார் 24-26 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜின் தவிர இந்த காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. அதுவும் கூட இதே 1.2 லிட்டர் யூனிட்தான்.

இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு சுமார் 33 கிலோ மீட்டர் என்ற அளவிற்கு இருக்கலாம். எனவே அதிக வசதிகளுடன், தாராளமாக மைலேஜ் வழங்க கூடிய ஒரு செடான் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் மிகவும் ஏற்றதாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை சுமார் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2024, 23:59 [IST]
English summary
New gen maruti suzuki dzire launch date november 11 what we know so far
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+