35 கிமீ மைலேஜ் தரும் மாருதி கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! பாதுகாப்பிலும் குறையே சொல்ல முடியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது சப்-4 மீட்டர் செடான் (Sub-4 Metre Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருந்து வருவது மாருதி சுஸுகி டிசையர் காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். ஆனால் போட்டி அதிகரித்து கொண்டே வரும் காரணத்தால், டிசையர் காரின் 4வது தலைமுறை (Fourth Generation) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், நடப்பு 2024ம் ஆண்டின் 2வது பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்த காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Maruti Suzuki Dzire

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் (Features) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில், இந்திய சந்தையில் இந்த வசதிகளுடன் வரும் முதல் சப்-4 மீட்டர் செடான் என்ற பெருமையை புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் பெறும்.

இதுதவிர 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன வசதிகளும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maruti Suzuki Dzire Side Design

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் இதே இன்ஜின் உடன் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி மாடல்கள் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக உள்ளன.

ஆனால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி மாடல்கள் ஒரு கிலோவிற்கு சுமார் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

டிசைனை (Design) பொறுத்தவரையில், க்ரில் பேட்டர்ன் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேர்த்தியான ஹெட்லைட்கள், புதிய பம்பர், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம். இதுதவிர தற்போதைய மாடலை விட, புதிய மாடலில், லக்கேஜ்களை வைப்பதற்கான இடவசதி அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை (Price) 7 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என்று நாங்கள் கருதுகிறோம். ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), டாடா டிகோர் (Tata Tigor) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) ஆகிய கார்களுக்கு இது விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் பாதுகாப்பை பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது அதிக பாதுகாப்பை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்ற அம்சமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 30, 2024, 14:14 [IST]
English summary
New gen maruti suzuki dzire launch soon expected price mileage features
மேலும்... #Maruti Dzire 2024 #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+