இன்னைக்கு ஒரு நைட்தான்! 34 கிமீ மைலேஜ் தரும் பாதுகாப்பான கார் விடிஞ்சதும் லான்ச் ஆகுது! விலை இவ்ளோதானா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் (New-gen Maruti Suzuki Dzire). இது தற்போது விற்பனையில் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டுள்ள மாருதி சுஸுகி டிசையர் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடல் ஆகும். விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மாருதி சுஸுகி நிறுவனம், டிசையர் காரை மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்து இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் நாளை (நவம்பர் 11) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) களமிறங்கவுள்ளது. அவை LXi, VXi, ZXi மற்றும் ZXi Plus ஆகியவை ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கொண்டிருக்கும். இதன் பவர் அவுட்புட் 80 பிஹெச்பி மற்றும் 112 என்எம் டார்க் ஆக இருக்கும். இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கும்.
பெட்ரோல் தவிர, புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெற்றிருக்கும். முதலில் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு சில மாதங்கள் கழித்துதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல் வெர்ஷன் உடன் சேர்த்து, சிஎன்ஜி வெர்ஷனும், நாளையே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பெட்ரோல் வெர்ஷனில் வழங்கப்படவுள்ள அதே 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான், சிஎன்ஜி வெர்ஷனிலும் வழங்கப்படவுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கும். அதாவது சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவர் மற்றும் 101.8 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும்.
ஆனால் மைலேஜ் (Mileage) அதிகமாக இருக்கும். அதாவது பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 25.71 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். இவையே நல்ல மைலேஜ்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
ஆனால் சிஎன்ஜி வெர்ஷன், இதை விட அதிகமான மைலேஜை வழங்கும். சரியாக சொல்வதென்றால் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி வெர்ஷனில், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் இருக்காது.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இடம்பெற்றிருக்கும். வசதிகளை (Features) பொறுத்தவரையில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக இருக்கும்.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், பாதுகாப்பிலும் தலைசிறந்து விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையரின் வருகை, டாடா டிகோர் (Tata Tigor), ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) மற்றும் ஹோண்டா அமேஸ் (Honda Amaze) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம். புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை சுமார் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








