முதல் முறையாக இந்தியாவில் காட்சி தந்த மாருதியின் புதிய கார்! இது இவ்ளோ மைலேஜ் தருமா! எதிர்பார்ப்பு எகிறுது!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கப்படும் முன்னணி கார் மாடல்களில் ஒன்றாக டிசையர் (Dzire) இருக்கின்றது. இந்த கார் மாடலின் மூன்றாம் தலைமுறை வெர்ஷனையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுஸுகி ஈடுபட்டு வருகின்றது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே மூன்றாம் தலைமுறை டிசையரின் சோதனை ஓட்டத்தை அந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. அவ்வாறு சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுவே அந்த கார் சோதனையோட்டம் செய்யப்படும்போது ஸ்பை செய்யப்படுவது முதல் முறையாகும்.

ஆகையால், இணையவாசிகள் மத்தியில், குறிப்பாக, மாருதி கார் ஆர்வலர்கள் மத்தியில் இந்த படம் காட்டு தீயாய் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வாயிலாக கணிசமான முக்கிய தகவல்கள் புதிய தலைமுறை டிசையர் குறித்து தெரிய வந்திருக்கின்றது. அந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலேயே இந்தியாவில் சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
இருப்பினும் ஒரு சில அம்சங்கள் தெளிவாக அதன் காட்சியை வழங்கின. அந்தவகையில், பெரிய வட்ட வடிவ கிரில், சற்று தூக்கலான அமைப்புடைய பம்பர் ஆகியவை இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, புதிய எல்இடி லைட் செட்-அப்பும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

மேலும், புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், கேமிரா கொண்ட ஓஆர்விஎம் (இது 360 டிகிரி பார்வை திறன் கொண்டது). உள்ளிட்டவையே இந்த வாகனத்தில் இடம் பெற இருக்கின்றன. இதுபோன்று புதிய அம்சங்களை மூன்றாம் தலைமுறை டிசையர் தாங்கி இருந்தாலும் வெளிப்புற தோற்றம் மற்றும் மற்ற அம்சங்களில் இது ஓர் டிசையர் என்பதை தவிர்க்காமல் காட்டும் வகையில் இருக்கின்றது.
இதுதவிர பெரிய திரை ஒன்றும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. அது 9 அங்குலத்தில் இருக்கக் கூடும் என தெரிகின்றது. இவற்றுடன் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Image Courtesy: Jain Deepak/Faceboo kபாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மோட்டாருடனேயே ஜப்பானில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் காரில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82பிஎஸ் மற்றும் 108 என்எண் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷனும் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் டிசையரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இதன் விற்பனைக்கான வருகை எப்போது அமையும் என்பது தெரியவில்லை. விரைவிலேயே மூன்றாம் தலைமுறை டிசையர் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே தற்போது அக்கார் சோதனை ஓட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
மிக முக்கியமாக புதிய தலைமுறை டிசையர் மிக அதிகமாக மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. லிட்டர் ஒன்றிற்கு 25 கிமீ தொடங்கி 30 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது. ஆனால், இதை மாருதி சுஸுகி இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிசையர் கார் மாடலுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையிலேயே புதிய தலைமுறையை ஹைபிரிட் அம்சத்துடன் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மாருதி சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. இது அதிகம் மைலேஜ் தரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை இந்த கார் ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









