மைலேஜை வாரி வழங்கும் காரை களத்தில் இறக்கும் மாருதி... பைக் கம்பெனிகளை எல்லாம் இழுத்து மூட போறாங்க...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய தலைமுறை மாடலில், புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் (1.2-litre Z Series Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய தலைமுறை ஸ்விஃப்ட் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் இந்த இன்ஜின் பெட்ரோல் மூலமாக மட்டுமே இயங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில், இந்த இன்ஜின் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனை பெறவுள்ளது. இந்த தகவல், சிஎன்ஜி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் தற்போதைய நிலையில் இந்த 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவர் மற்றும் 100 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் வழங்கும் எனவும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் புதிதாக வரவுள்ள சிஎன்ஜி மாடல் இதைக்காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கும் என நாம் உறுதியாக நம்பலாம்.

குறைந்தபட்சம் 32 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் கிடைக்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகியுள்ளன. இதற்கிடையே நாங்கள் ஏற்கனவே கூறியபடி புதிய தலைமுறை ஸ்விஃப்ட்தான், இந்தியாவில் புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜினை பெற்றுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் ஆகும். புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை தொடர்ந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் இன்னும் பல்வேறு கார்களிலும், இந்த 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது.
இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் பெட்ரோல் தவிர்த்து, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்கள் மூலம் இயங்கும் கார்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில்தான், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் உடனும், சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. மைலேஜ் அதிகமாக கிடைக்கும் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








