லுக்கில் ஸ்விஃப்ட்போல இருக்கும் காரை விற்பனைக்கு கொண்டு வரும் மினி! ரெண்டுல ஒன்னு ஓட பெட்ரோல்-டீசல் தேவையில்ல!

பிரீமியம் கார்கள் உற்பத்தி நிறுவனமான மினி (Mini) இந்தியாவில் விரைவில் இரண்டு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஸ்விஃப்ட் (Swift) போன்ற தோற்றமுடைய, அதேவேளையில், அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த கூப்பர் எஸ் (Cooper S) மற்றும் கன்ட்ரீமேன் (Countryman) எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு கார் மாடல்களையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த இரண்டு கார் மாடல்களுக்குமான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தற்போது அறிமுக நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி அன்றே இந்த கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. கூப்பர் எஸ்-இன் புதிய தலைமுறை வெர்ஷனும், கன்ட்ரீமேன் எஸ்இ எலெக்ட்ரிக்-கும்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Mini cooper and countryman launch date

மினி கூப்பர் எஸ்: ஐந்தாம் தலைமுறை கூப்பர் எஸ் கார் மாடலே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் மினி கூப்பர் எஸ் மாடலைக் காட்டிலும் சற்றே மெருகேற்றப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்கு அதன் லுக் மாறி இருக்கின்றது.

இதன் கிரில் மிகவும் மெல்லியதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதன் ஹெட்லைட்டை மாற்றவில்லை. அதே வட்ட வடிவத்திலேயே ஹெட்லைட் காட்சியளிக்கின்றது. இதேபோல், இந்த காரின் பம்பருக்கும் கூடுதலாக அழகு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. காரின் பின்புறத்தில் முக்கோண வடிவ லைட், யூனியன் ஜாக் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 பிஎஸ் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் 26 பிஎஸ் மற்றும் 20 என்எம் டார்க் அதிகம் ஆகும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே புதிய கூப்பர் எஸ் கொண்டிருக்கம்.

இந்த காரால் வெறும் 6.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும், அது தற்போது விற்பனையில் இருக்கும் மினி கூப்பர் எஸ் மாடலைப் போலவே காட்சியளிக்கின்றது. இந்த கார் சி மற்றும் எஸ் என இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மினி கன்ட்ரிமேன்: இந்த கார் மாடலை மினி நிறுவனம் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 (BMW iX1) கார் மாடலின் தளத்தை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். உலக சந்தயைில் இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இ (E) மற்றும் எஸ்இ ஆல்4 (SE ALL4) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டும் 64.7 kWh பேட்டரி பேக்கையேக் கொண்டுள்ளன. ஆனால், இ வேரியண்டில் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 204 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

அதே நேரத்தில் எஸ் வேரியண்டோ 313பிஎச்பி மற்றும் 493என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும். இதற்கு இந்த தேர்வில் இரண்டு மின்சார மோட்டார் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் ஓர் முழு சார்ஜில் 461கிமீ ரேஞ்ஜை வழங்கும். அதேசமயம் எஸ்இ வேரியண்டில் இரண்டு மோட்டார்கள் இடம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் அதன் ரேஞ்ஜ் திறன் 433கிமீட்டராக உள்ளது. இத்தகைய திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் காரையே இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது மினி.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இந்த இரண்டு கார் மாடல்களுமே அளவிலும், சிறப்பு அம்சங்களிலும், பிரீமியம் வசதிகளிலும் ஸ்விஃப்ட்டை இந்த பலமடங்கு மிஞ்சக் கூடியவை ஆகும். இதனால்தான் விலையிலும் இந்த காரைக் காட்டிலும் பலமடங்கு உயரியதாக மினி கார்கள் காட்சியளிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 25, 2024, 12:13 [IST]
English summary
New gen mini cooper and countryman electric india launch july 2024
மேலும்... #mini #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+