10 வருஷம் மார்க்கெட்டை ஆட்டி படைச்ச கார்! மறுபடியும் விற்பனைக்கு வரப்போகுதா! போட்டி நிறுவனங்கள் கதற போறாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் ஒரு கட்டத்தில் ரெனால்ட் நிறுவனத்தின் அடையாளமாக ரெனால்ட் டஸ்டர் மாறியது. ஆனால் வருடங்கள் ஆக ஆக ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை மந்தமாகி கொண்டே வந்தது. இதன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு, ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.
ஆனால் இது தற்காலிகமான ஒரு நடவடிக்கை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இம்முறை வெகுவாக அப்டேட் செய்யப்பட்டு புதிய தலைமுறை மாடலாக ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்திய சாலைகளில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் சோதனையோட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
இந்திய சாலைகளில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் சோதனையோட்டம் தொடங்கியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டிசைனை பொறுத்தவரையில், 'Y' வடிவ எல்இடி பகல் நேர விளக்குகள், 'C' வடிவ டெயில்லைட்கள் போன்றவை எல்லாம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பாடி கிளாடிங், புதிய ட்யூயல் டோன் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப்ரெயில்கள் போன்றவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம். வசதிகளை பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் மல்டிஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சாலைகளில் சோதனையோட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், கூடிய விரைவிலேயே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடனும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








