இருங்க பாய்... 7 பேர் போற காரை கம்மி விலையில் களமிறக்க போகும் முன்னணி நிறுவனம்... சம்பவம் லோடிங்...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே 7 பேர் பயணிக்க முடியும். விலை குறைவானது மற்றும் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்றாலும் கூட, சமீப காலமாக ரெனால்ட் ட்ரைபர் காரின் விற்பனை 'டல்' அடிக்கிறது. கடந்த 6 மாத கால அளவில் பார்த்தோம் என்றால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,750 ரெனால்ட் ட்ரைபர் கார்கள் மட்டுமே விற்பனையாகி கொண்டுள்ளன.
எனவே ட்ரைபர் காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளை ரெனால்ட் நிறுவனம் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை (New-gen) மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் 2027ம் ஆண்டிற்குள் இந்திய சந்தையில் 5 புதிய கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதில், புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் காரும் ஒன்றாகும். ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டன. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஹேட்ச்பேக் கார்களின் விலையில் ரெனால்ட் நிறுவனம் ஒரு எம்பிவி காரையே விற்பனைக்கு களமிறக்கியதால், பலருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் வருடங்கள் ஆக ஆக ரெனால்ட் ட்ரைபர் கார் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய தவறியது. எனவே ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலை களமிறக்குவது அவசியமான ஒன்றுதான்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார், வரும் 2025ம் ஆண்டின் கடைசியிலோ அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெனால்ட் ட்ரைபர் காரில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் புதிய தலைமுறை அப்டேட் என்பதால், விற்பனைக்கு வரவுள்ள புதிய மாடலில், புதிய இன்ஜின் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலில் பல்வேறு புதிய வசதிகளை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் காரில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் பல்வேறு புதிய வசதிகளை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.
அத்துடன் டிசைனிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என்பது உறுதி. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை வெறும் 8.97 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் புதிய தலைமுறை மாடல், பல்வேறு அப்டேட்களுடன் வரவுள்ளதால், விலை சற்று அதிகமாக இருக்கலாம். இருப்பினும் மிகவும் விலை குறைவான எம்பிவி ரக கார்களில் ஒன்று என்ற பெருமையை, புதிய தலைமுறை ரெனால்ட் ட்ரைபர் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








