புதிய தலைமுறை வாகனங்களாக சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கும் கார்கள்.. ஏற்கனவே வளச்சு போட்டது பத்தலையா!!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சில கார் மாடல்கள் விரைவிலேயே புதிய தலைமுறை (New Gen) வாகனங்களாக விற்பனைக்கு வர இருக்கின்றன. கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு நவீன அம்சங்கள் பல தாங்கிய வாகனமாக அவை விற்பனைக்கு வர இருக்கின்றன. மிக முக்கியமாக நவீன யுகத்திற்கு ஏற்பவும், இன்றைய கால இளைஞர்களைக் கவரும் பொருட்டும் புதிய கவர்ச்சியான தோற்றத்தைப் பெற்று அவை விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், இந்தியர்களின் மனம் கவர்ந்த சில முன்னணி கார் மாடல்களும் புதிய தலைமுறை வாகனமாக விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

அவற்றில் மூன்று முக்கியமான கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, மாருதி சுஸுகி அதன் டிசையர் கார் மாடலையும், ஹூண்டாய் நிறுவனம் அதன் வென்யூ கார் மாடலையும், ஹோண்டா அதன் அமேஸ் கார் மாடலையும் புதிய தலைமுறைகளாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன. இவற்றை பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

New generation cars set for launch in india

மாருதி சுஸுகி டிசையர்: இந்தியர்களின் ஃபேவரிட் மாருதி கார் மாடல்களில் இதுவும் ஒன்று என கூறலாம். இந்தியாவில் இந்த காரையே புதிய தலைமுறை வெர்ஷனாக மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி அன்றே இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகையால், இந்த நாளின் மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்காக தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த காரில் பல்வேறு அட்வான்ஸ்டு மற்றும் நவீன கால அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக மாருதி நிறுவனம் எலெக்ட்ரிக் சன்ரூஃப் அம்சத்தை இந்த காரில் சேர்த்து இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் வேறு எந்த சப்-காம்பேக்ட் செடான் காரிலும் இந்த அம்சத்தைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், எலெக்ட்ரிக் சன்ரூஃப் அம்சத்தைப் பெற்ற முதல் சப்-காம்பேக்ட் செடான் காராக மாருதி சுஸுகி டிசையர் விளங்க உள்ளது. இதுமட்டுமில்லைங்க எஞ்சின், காரின் உள்பக்கம் என பலவற்றில் மிக முக்கியமான மாற்றங்களை இந்த கார் பெற்றிருக்கும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: இந்தியாவில் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷன் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்படும் படங்கள் தெற்கு கொரியாவில் இருந்து வெளியாகின. இதன் வாயிலாகவே ஹூண்டாய் நிறுவனம் அதன் வென்யூ கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

என்ன மாதிரியான மாற்றங்களை இந்த காரில் ஹூண்டாய் செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த ஆண்டிலேயே இந்த காரின் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறையின்கீழ் இந்த காரில் புதிய பம்பர், கிரில், முகப்பு லைட் உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு அம்சங்களும் புதிய தலைமுறை வென்யூ காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏற்கனவே இந்த காருக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் புதிய தலைமுறை வென்யூ விற்பனைக்கு வரும் எனில் அது அதற்கு கூடுதல் பலத்தை வழங்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா அமேஸ்: இந்தியாவில் விரைவில் புதிய தலைமுறையாக விற்பனைக்குக் கிடைக்க இருக்கும் கார் மடால்களில் ஹோண்டாவின் அமேஸ்-ம் ஒன்றாகும். சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய கார் மாடல்களில் காணப்படும் சில முக்கியமான அம்சங்களை இந்த காரில் ஹோண்டா சேர்க்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பெரிய திரை, கூடுதல் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய கேபின் உள்ளிட்டவற்றையே புதிய தலைமுறையின்கீழ் அமேஸ் செடான் கார் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், முழுமையான மாற்றங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம். இதன் வாயிலாக இந்த காரின் விற்பனையை பலமடங்காக அதிகரிக்கச் செய்ய முடியும் என நிறுவனம் நம்புகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வான்ஸ்டு அம்சங்கள் மற்றும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கிய வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே மேலே பார்த்த கார் மாடல்களை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தலைமுறை வாகனங்களாக அவற்றை தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 11:00 [IST]
English summary
New generation cars by maruti hyundai and honda launching soon in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+