கண்ணுக்கு மேல மீசை வச்ச மாதிரி இருக்கு.. ஹோண்டாவுக்கு இந்த கார் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா!
ஹோண்டா (Honda), நிறுவனம் இந்தியாவில் மிக குறைவான கார் மாடல்களையே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் அமேஸ் (Amaze)-ம் ஒன்றாகும். இது நிறுவனத்தின் முன்னணி கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு இந்தியர்களிடத்தில் கணிசமான அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, செடான் கார் (Sedan Car) பிரியர்களின் மனம் கவர்ந்த வாகனங்களில் அமேஸ்-ம் ஒன்றாகும். இத்தகைய கார் மாடலின் புதிய தலைமுறை (New Gen) வெர்ஷனையே ஹோண்டா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனமும் புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படத்தின் வாயிலாக புதிய தலைமுறை அமேஸ் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது மட்டுமல்ல, அந்த கார் அட்டகாசமான புதிய ஸ்டைலைத் தாங்கிய வாகனமாக மாறியிருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.

அதேவேளையில், புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலின் முழு சுயவிபரத்தையும் விவரிக்கக் கூடிய படத்தை ஹோண்டா வெளியிடவில்லை. முன் பக்கத்தைக் காண்பிக்கக் கூடிய நிழற்படம் மட்டுமே டீசராக வெளியிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக முகப்பு பகுதி மிகப் பெரிய மாற்றத்திற்கு ஆளாகி இருப்பது உறுதியாகி உள்ளது.
குறிப்பாக, இதன் மின் விளக்குகள் மிகவும் அட்டகாசமான லுக்கிற்கு மாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஹெட்லைட்டுகளுக்கு மேலே பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகள் இடம் பெற செய்யப்பட்டு இருப்பது மிகவும் கவர்ச்சியான லுக்கை அக்காரின் முன் பக்கத்திற்கு வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
அந்த லைட்டின் தோற்றமானது மீசையை போல காட்சியளிக்கின்றது. அதேவேளையில், இதன் ஹெட்லைட்டுகள் கண்களைப் போல காட்சியளிக்கின்றது. எனவே கண்களுக்கு முறுக்கு மீசை இடம் பெற்றிருப்பதைப் போல அது உள்ளது. இதேபோல், பான்னெட், பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்டவற்றிற்கும் புதிய லுக் வழங்கப்பட்டு இருப்பதை இந்த டீசர் உறுதிப்படுத்துகின்றது.
ஆகையால், புதிய தலைமுறை அமேஸ் நிச்சயம் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இளம் தலைமுறையினர்களைக் கவரக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த வாகனத்தில் வழங்கி இருப்பதாக ஹோண்டா தெரிவித்து இருக்கின்றது. எனவே அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, கம்ஃபோர்ட்டான டிராவல் அனுபவத்தை வழங்கும் வசதி, பாதுகாப்பு மற்றும் சிறந்த செயல் திறன் உள்ளிட்டவற்றை புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலில் எதிர்பார்க்கலாம். எனவே, செடான் கார் காதலர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கக் கூடிய வாகனமாக இந்த அமேஸ் அமையும் என நம்பப்படுகின்றது.
அமேஸ் ஓர் காம்பேக்ட் வகை செடான் ரக கார் மாடல் ஆகும். இதன் புதிய தலைமுறை வெர்ஷனை ஹோண்டா இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பது செடான் கார் காதலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த கார் இன்னும் விரிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அதுபற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் இப்போதைய நிலவரப்படி சிட்டி, சிட்டி இ:எச்இவி, எலிவேட் எஸ்யூவி மற்றும் அமேஸ் ஆகிய கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்திய சந்தையின் கவனத்தை தன் திருப்பும் பொருட்டு அது புதிய தலைமுறை வெர்ஷனைக் களமிறக்குவதற்கான முயற்சியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இது இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பருக்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








