33 கிமீ மைலேஜ் தரும் காரை தரமட்ட ரேட்டில் களமிறக்க போறாங்க! லோன் போடாம கைல இருக்க காச வெச்சே வாங்கீரலாம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் செடான் (Sedan) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இதன் புதிய தலைமுறை (New Generation) மாடல், விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சரியாக சொல்வதென்றால், இதற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. ஆம், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், வரும் நவம்பர் 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தகவல் ஆகும்.
இதற்கு இன்னும் சரியாக ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், புதிய தலைமுறை டிசையர் காரின் டீசர் (Teaser) புகைப்படத்தை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது மாருதி சுஸுகி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ புதிய தலைமுறை டிசையர் காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இதன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்கள் தோராயமாக ஒரு லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது. அதிலும் மேலே குறிப்பிட்டுள்ள 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்தான் இடம்பெறும். இதன் உடன் ஏஎம்டி கியர் பாக்ஸ் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும்.
எனினும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் சிஎன்ஜி இன்ஜின் தோராயமாக ஒரு கிலோவிற்கு 33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிக மைலேஜ் கிடைக்க கூடிய ஒரு செடான் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், சன்ரூஃப், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், ஆரம்ப நிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சென்சார்கள் உடன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாய்க்குள் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








