குடும்பத்துடன் 7 பேர் பயணிக்கும் காரின் மைலேஜ் இவ்வளவு ஜாஸ்தியா?
கியா நிறுவனம் இந்த மாத துவக்கத்தில் தனது அப்டேட் செய்யப்பட்ட கார்னிவெல் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூபாய் 63.9 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. தற்போது இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு மைலேஜ் தரும் என்ற விபரங்கள் வெளியாகி உள்ளன. இது பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சமீப நாட்களாக குடும்பத்துடன் பயணிக்கும் உலக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் அதிக சீட்டர் கொண்ட கார்கள் இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்படுத்தியுள்ளன. இந்த கார்களுக்கான புக்கிங் அதிகமாகி வரும் நிலையில் கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரை அப்டேட் செய்து தற்போது வெளியிட்டுள்ளது.

கியா நிறுவனத்தின் கார்னிவெல் கார் ஒரு பிரீமியம் ரக எம்பிவி ரக காராக இருக்கிறது. இந்த கார் ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு புதிய இன்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகம்யாகி உள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள கியா கார்னிவெல் காரை பொறுத்தவரை 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும் 441 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இது குடும்பத்துடன் பயணிக்கும் வகையில் 7 சீட்டர் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பங்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கார் குறித்த மைலேஜ் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 14.85 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட புதிய கார்னிவெல் காரில் அனைத்து லைட்டுகளும் எல்இடி லைட்களாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 18 இன்ச் கொண்ட டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக்கலி ஸ்லைடிங் செய்யக்கூடிய பின்பக்கம் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இரண்டு எலெக்ட்ரானிக்ஸ் சன்ரூஃப்களும் சிஸ்டமும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரின் உள்ளே இரண்டு 12.3 இன்ச் கொண்ட ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்யும் வசதிகளும் உள்ளன. மேலும் இந்த காரில் உள்ள டிரைவர் சீட் 12 வழியில் பவர் அட்ஜஸ்டெபிள் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காரில் உள்ள முதல் இரண்டு வரிசை சீட்டுகள் வென்டிலேட்டட் சீட்டுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் இரண்டாவது வரிசை மற்றும் மூன்றாவது வரிசை சீட்டுகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு கர்ட்டன் பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சன் ஷேடு கர்ட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை ஃப்யூஷன் பிளாக் மற்றும் கிளேசியர் ஒயிட் பியர்ல் ஆகிய இரண்டு விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த கார் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பலர் இந்த காரின் மைலேஜ் குறித்து பெரிதும் கவலைப்பட்ட நிலையில் தற்போது இந்த மைலேஜ் விபரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது 7 பேர் பயணிக்கும் கார் மற்றும் பிரீமியம் ரக கார் என பல அம்சங்களை கொண்டிருந்தாலும், 14 கிலோமீட்டர் மைலேஜ் என்பது தாராளமான மைலேஜாக தான் பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரீமியம் அம்சம் நிறைந்த குடும்பத்துடன் பயணிக்கும் ரக பெரிய கார்களை விரும்புபவர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல சான்ஸ் தான் இந்த காரின் மைலேஜ் அதிகமாக இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருவார்கள். நிச்சயம் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களை விரும்புபவர்களுக்கு இந்த கார் ஒருவர் வரப்பிரசாதமாக அமையும்.


Click it and Unblock the Notifications









