9 பேர் கூட ஏறலாம்... லாங் ட்ரிப்புக்கு இந்த மாதிரி ஒரு கார் இருந்தால் கரெக்ட்டா இருக்கும்!! கியாவின் புது கார்

கியா கார்னிவல் (Kia Carnival) காரின் புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2019ஆம் ஆண்டில் இந்திய கார்கள் மார்க்கெட்டில் நுழைந்த தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதல்முறையாக கார்னிவல் என்கிற பிரம்மாண்ட சொகுசு எம்பிவி காரை அறிமுகம் செய்தது. இதற்கேற்ப இந்த கொரியன்-ஸ்டைல் கியா காரின் விலையும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்சமயம் கியா கார்னிவல் கார் விற்பனையில் இல்லை.

new kia carnival spotted

இந்தியாவில் மிகவும் சில ஷோரூம்களில் மட்டுமே ஸ்டாக்கில் உள்ளவரை கிடைக்கிறது. ஆனால் அதற்காக கார்னிவல் காரின் விற்பனையை கியா நிறுவனம் அப்படியே விட்டுவிட போவதில்லை. மீண்டும், கார்னிவல் எம்பிவியை கியா விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வருகிற செப்டம்பர் மாதம் முடிவதற்குள் புதிய கார்னிவல் காரின் அறிமுகம் இருக்கலாம்.

இந்த நிலையில், இந்தியாவில் 2024 கியா கார்னிவல் கார் ஒன்று சாலைகளில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட படங்களில் கார் எந்தவொரு மறைப்பும் இன்றி இருப்பதை காணலாம். ஆதலால், புதிய கார்னிவல் காரின் வெளிப்பக்க தோற்றத்தில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போதே அறிய முடிந்துள்ளது.

new kia carnival spotted

சஸ்பென்ஸை குறைக்காமல் இருக்க, பொதுவாக ரோடு டெஸ்ட்டிங்கில் புது கார்கள் முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்டவாறே சோதனை செய்யப்படுவது வழக்கம். வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்ட 2024 கார்னிவல் காரை இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம் காட்சிப்படுத்தி இருந்தது.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு 1 வருடத்திற்கும் மேல்ஆகிவிட்ட போதிலும் இன்னும் புதிய கார்னிவல் கார் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போதைய ரோடு டெஸ்ட்டிங்கின்போது எடுக்கப்பட்ட படங்களின் மூலம் பார்க்கும்போது, புதிய கார்னிவல் கார் நிறைய ஃப்ரஷ்ஷான பாகங்களை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் கியா கார்னிவல் கார் அப்படியே தற்போது இந்தியாவில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.

new kia carnival spotted

இந்திய வெப்பநிலை மற்றும் சாலை தரத்திற்கு ஏற்ப காரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் அல்லது செய்யப்படாமலும் போகலாம். பழைய கார்னிவலுக்கும், இந்த புதிய கார்னிவலுக்கும் ஹெட்லேம்ப் & டெயில்லேம்ப் டிசைன் வேறுப்படுகிறது. காரின் முன்பக்கத்தில் க்ரில் அமைப்பின் டிசைனும் வித்தியாசப்படுகிறது. புதிய கார்னிவல் காரின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன.

பின்பக்க பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் புதிய கார்னிவல் காரின் உட்பக்கத்தை காண முடியவில்லை. வெளிநாட்டில் கார்னிவல் காரில் எப்படி உள்ளதோ அதுபோன்றே வழங்கப்படும். டொயோட்டா இன்னோவா கார் ஹைப்ரீட் வெர்சனிலும் கிடைப்பதால், புதிய கார்னிவலில் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனையும் கியா அறிமுகப்படுத்தலாம்.

new kia carnival spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசால் மாசு உமிழ்வு விதிமுறைகளில் புதியதாக கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளால் கார்னிவல் காரின் விற்பனையை கியா நிறுத்தியது. அதுமட்டுமின்றி, அந்த சமயத்தில் கார்னிவல் கார்களின் விற்பனையும் பெரிய அளவில் இல்லை. புதிய கியா கார்னிவல் காராவது அதிகம் விற்பனையாகுமா? மக்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 15:27 [IST]
English summary
New kia carnival spotted while road testing in india check all details here
மேலும்... #கியா #kia #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X