புது பி.எம்.டபிள்யூ கார் இந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்னு எதிர்பார்க்கல... புக் பண்ண பணத்தை ரெடி பண்ணியாச்சா?

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதை அடுத்து புது, புது கார்கள் விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த வகையில், இந்த ஜூலை மாதத்திலும் சில புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், நாளை (ஜூலை 24) புதியதாக 4 சொகுசு கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. உலகளவில் பிரபலமான பிஎம்டபிள்யூ க்ரூப்பில் இருந்து இந்த சொகுசு கார்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றின் சிறப்பம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் (BMW 5 Series LWB): மேம்படுத்தப்பட்ட 2024 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் இந்தியாவில் லாங் வீல்பேஸ் வெர்சனில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக இருக்கும். இதனால், காருக்குள் கேபின் இடவசதி ஆனது நன்கு விசாலமானதாக கிடைக்கும். புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் வெளிப்பக்கம் ஆனது புதிய டிசைனில் வழங்கப்பட உள்ளது.

new launches from bmw group

காரின் முன்பக்கத்தில் கிட்னி வடிவிலான கிரில் பகுதி நன்கு பெரியதாக, ஒளிரக்கூடியதாக வழங்கப்பட உள்ளது. புதிய 5 சீரிஸ் காரின் முன்பகுதி இன்னும் கூர்மையானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஹெட்லைட் மற்றும் முன்பக்க பம்பர் ஷார்ப்பான வடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. விற்பனையில் இந்த பிஎம்டபிள்யூ காருக்கு போட்டியளிக்கும் விதமாக இந்த ஆண்டு இறுதியில் மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மினி கூப்பர் எஸ் (Mini Cooper S): பிஎம்டபிள்யூ க்ரூப்பின் கீழ் செயல்படும் நிறுவனம் மினி ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மினி கார்களுள் ஒன்றாக மினி கூப்பர் எஸ் உள்ளது. இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முக்கியமாக, காரின் முன்பகுதி பெரிய அளவிலான கிரில் மற்றும் ரீடிசைனிலான ஹெட்லைட்கள் உடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

new launches from bmw group

காரின் பின்பக்கத்தில் வழக்கம்போல், முக்கோண டிசைனிலான டெயில்லைட்கள் கொடுக்கப்பட உள்ளன. காருக்கு உள்ளே வட்ட வடிவில் ஓஎல்இடி இன்ஃபோடெயின்மெண்ட் திரை புதிய அப்டேட்டாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், புதிய கூப்பர் எஸ் காரில் பொருத்தப்பட உள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆனது முன்பை காட்டிலும் சிறப்பான செயல்படுதிறனை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளது.

மினி கண்ட்ரிமேன் இ (Mini Countryman E): பிஎம்டபிள்யூ க்ரூப்பில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள எலக்ட்ரிக் கார். பிஎம்டபிள்யூ ஐ.எக்ஸ்1 என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மினி எலக்ட்ரிக் கார் இதுவாகும். மற்றப்படி, இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய விபரங்கள் எதுவும் தற்போதைக்கு அதிகமாக இல்லை. வெளிநாடுகளில் சிங்கிள்-மோட்டார் மற்றும் ட்யூயல்-மோட்டார் ஆப்ஷன்களில் மினி கண்ட்ரிமேன் இ எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

new launches from bmw group

பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04): இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இந்தியாவில் பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துவந்த பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் மிகுந்த ஆலோசனைகளுக்கு தனது முதல் ஸ்கூட்டரை 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. தற்போது 2வது ஸ்கூட்டரை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் தயாராகி வருகிறது.

new launches from bmw group

புதிய பிஎம்டபிள்யூ சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏற்கனவே முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டன. அளவில் பெரியதாக மேக்ஸி ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக கொண்டுவரப்படும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையை ஏறக்குறைய ரூ.10 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். 15 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரை கொண்ட இந்த இ-ஸ்கூட்டரில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஜூலை 24ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் 4 புதிய வாகனங்களும் பிஎம்டபிள்யூ க்ரூப்பை சேர்ந்தவை ஆகும். இதில் 2 வாகனங்கள் வழக்கமான என்ஜினில் இயங்கக்கூடியவைகளாகவும், 2 வாகனங்கள் எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடியவைகளாகவும் வழங்கப்பட உள்ளன. இவற்றில் குறிப்பாக, பிஎம்டபிள்யூ சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 23:16 [IST]
English summary
New launches from bmw group 5 series to ce 04 electric scooter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X