35 கிமீ மைலேஜ் தரும் கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா! பைக் கம்பெனிகள் பொழப்புல மண்ண அள்ளி போட போகுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire). இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது மாருதி சுஸுகி டிசையர் காரின் 3வது தலைமுறை மாடல் ஆகும். இதன் 4வது தலைமுறை (Fourth Generation) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முழுமையாக தயாராகி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி டிசையர் காரின் 4வது தலைமுறை மாடல், இந்திய சாலைகளில் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 4வது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார், வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Maruti Suzuki Dzire

இந்த புதிய மாடலில், புத்தம் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இஸட் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

இதன் மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு சுமார் 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம் எனவும், ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு சுமார் 26 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 4வது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் கார் ஆரம்பத்தில் இந்த ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளது.

Maruti Suzuki Dzire Interior

ஆனால் ஒரு சில மாதங்களுக்கு பிறகு, சிஎன்ஜி இன்ஜின் கொண்ட புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இது அதிக மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும். மாருதி சுஸுகி டிசையர் காரில் தற்போதைய நிலையிலேயே சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இன்ஜின் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. ஆனால் 4வது தலைமுறை மாடலின் சிஎன்ஜி இன்ஜின் இதைக்காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக ஒரு கிலோவிற்கு 35 கிலோ மீட்டர் மைலேஜை நாம் எதிர்பார்க்கலாம்.

வசதிகளை பொறுத்தவரையில், 4வது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில், சிங்கிள் பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரின் புதிய தலைமுறை மாடல், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு களமிறக்கப்பட்டது.

அதில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை காட்டிலும், புதிய தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரில் இன்னும் ஏராளமான வசதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர டிசைனும் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு செடான் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு 4வது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 4வது தலைமுறை மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப விலை சுமார் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 10.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 12:59 [IST]
English summary
New maruti suzuki dzire launch confirmed in august full details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+