டூவீலர் மாதிரி மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி தொடங்கியது! விலை இவ்ளோதானா! ஷோரூம்களில் திருவிழா கூட்டம்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (2024 Maruti Suzuki Swift) கார், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது களமிறக்கப்பட்டிருப்பது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை (Fourth Generation) மாடல் ஆகும்.
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 80 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 112 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் இதே இன்ஜினில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனை வழங்கவுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, மைலேஜ் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.

9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் ஓஆர்விஎம்கள் போன்றவை 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முக்கியமான வசதிகளாக உள்ளன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ரியர் வியூ கேமரா, ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பிரேக் அஸிஸ்ட் போன்றவை, 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருடைய மிக முக்கியமான வசதிகள் ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.64 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த சூழலில், இந்தியாவில் 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை முன்பதிவு (Booking) செய்து விட்டு, டெலிவரிக்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை உயரும் என நாங்கள் கருதுகிறோம். இது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் போட்டி மாடல்களுக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








