புது மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை இவ்ளோதானா! ஆன்லைன்ல செல்போன் ஆர்டர் பண்ற மாதிரி ஆளாளுக்கு புக் பண்றாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போதில் இருந்து மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் நேற்று (மே 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 6.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.64 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நேற்றுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு அதிகாரப்பூர்வமான முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மே 1ம் தேதியே தொடங்கி விட்டது.

இந்த சூழலில் 9 நாட்கள் மட்டுமே முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்து விட்டதாக மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இது விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பே குவிந்த முன்பதிவுகளின் எண்ணிக்கை ஆகும்.
தற்போது விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காருக்கான விலையை சரியாக நிர்ணயம் செய்திருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே வரும் நாட்களில் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கான முன்பதிவுகள் மேலும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஏஎம்டி மாடல்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதால், விற்பனையில் சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
சிறப்பான மைலேஜ் உடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டிருப்பது, புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் கூடுதல் பலம். 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் போன்றவை புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மிக முக்கிய வசதிகள் ஆகும்.
மேலும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை. இதில், 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்றவை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு வசதிகளாக இருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய மாடலுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios), டாடா டியாகோ (Tata Tiago), சிட்ரோன் சி3 (Citroen C3), ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) போன்ற கார்களுக்கு, புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








