இந்தியாவே எதிர்பார்த்த பென்ஸ் காரின் விலையில் கிடைக்கும் பிஎம்டபிள்யூ கார் - இரண்டில் எதை வாங்குவது நல்லது?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் (E-Class Long Wheelbase) காரை இந்தியாவில் இன்று (அக்டோபர் 9) அறிமுகம் செய்ய உள்ளது. இது 6வது தலைமுறை இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் ஆகும். இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. தொழிற்சாலையில் காரை உற்பத்தி செய்யும் பணிகளும் துவங்கப்பட்டுவிட்டன. விற்பனையில் இந்த புதிய பென்ஸ் காருக்கு பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனத்தின் 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் சவாலான போட்டியாக இருக்கும். ஏனெனில், இந்த பிஎம்டபிள்யூ காரும் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

நீளம்: கடந்த ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் நீளம் 5175மிமீ ஆகும். மறுப்பக்கம், புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் நீளம் 5092மிமீ ஆகும். இது முன்பு விற்பனையில் இருந்த 5ஆம் தலைமுறை இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரை விட 17மிமீ அதிகமாகும். இருப்பினும், இப்போதும் 5-சீரிஸ் காரை விட இ-கிளாஸ் கார் நீளம் குறைவானது ஆகும்.

mercedes-benz e-class vs bmw 5-series

இதற்கேற்ப, வீல்பேஸ் எனப்படும் காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் பிஎம்டபிள்யூ காரில் அதிகமாக உள்ளது. 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் வீல்பேஸ் நீளம் 3105மிமீ ஆகும். அதுவே, மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் வீல்பேஸ் நீளம் 3094மிமீ ஆகும். இது, 5ஆம் தலைமுறை இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரை விட 15மிமீ அதிகமாகும்.

என்ஜின்: பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படுவதில்லை. அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 400 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

mercedes-benz e-class vs bmw 5-series

மறுப்பக்கம், புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரை 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 2.0 லிட்டர் டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். இவை இரண்டுடனும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதேநேரம், இந்த புதிய பென்ஸ் காரில் கூடுதல் இயக்க ஆற்றலுக்காக எந்தவொரு என்ஜின் உடனும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்நுட்ப வசதிகள்: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் முன்பக்கத்தில் க்ரோம் கிரில், எல்இடி ஹை-பெர்ஃபார்மன்ஸ் ஹெட்லைட்களை இணைக்கக்கூடிய கருப்பு நிற பேனல், புதிய டிசைனில் அலாய் சக்கரங்களும், காருக்கு உள்ளே டேஸ்போர்டில் AI-பவர் எம்பக்ஸ் சூப்பர்ஸ்க்ரீன்ஸ், பர்ம்ஸ்டர் 4டி சவுண்ட் சிஸ்டம், மென்மையாக மூடக்கூடிய கதவுகள், பனோராமிக் சன்ரூஃப், 4-ஸோன் ஏசி, வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

mercedes-benz e-class vs bmw 5-series

இதில் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்க்ரீன்ஸ் ஆக 14.4-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3-இன்ச் பேசஞ்சர் சைடு ஸ்க்ரீன் மற்றும் அதே அளவில் டிரைவருக்கான டிஸ்பிளே உள்ளிட்டவை அடங்குகின்றன. பின் வரிசை இருக்கைகளை 36-டிகிரி வரையில் மடக்கிக் கொள்ளலாம். மேலும், எலக்ட்ரிக் மூலமாக கண்ட்ரோல் செய்யக்கூடிய சன் பிளைண்ட்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

மறுப்பக்கம், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை புதிய இ-கிளாஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் உடன் ஒப்பிடுவதுதான் சரியானதாக இருக்கும். ஏனெனில், டீசல் என்ஜின் ஆப்ஷனில் 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் கார் விற்பனை செய்யப்படுவதில்லை என ஏற்கனவே கூறிவிட்டோம். கடந்த ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரில் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 14.9-இன்ச் டச் ஸ்க்ரீன், க்ரூஸ் கண்ட்ரோல், பனோராமிக் கண்ணாடி ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

mercedes-benz e-class vs bmw 5-series

இவற்றுடன், ஒளிரக்கூடிய கிரில், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் & வைபர்கள், காருக்கு உள்ளே பவர்டு முன் இருக்கைகள், கனெக்டட் கார் சேவைகள், கேபினை சுற்றிலும் விளக்குகள், டிஜிட்டல் சாவி, 655 வாட்ஸ் 18-ஸ்பீக்கர் பவர்ஸ் & வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமராக்கள், ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக ஸ்மார்ட்போனில் ரிமோட் பார்க்கிங் ஃபங்க்‌ஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72.90 லட்சமாக தற்சமயம் உள்ளது. ஆனால், புதிய மெர்சிடிஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் ஆரம்ப விலையையே ரூ.80 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். இதன்படி பார்க்கும்போது, சில லட்ச ரூபாய்கள் வரையில் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஆனது விலை குறைவானதாக உள்ளது. இருப்பினும், புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரின் விலை அறிவிக்கும் வரையில் பொறுமை காப்பது நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 8:00 [IST]
English summary
New mercedes benz e class lwb vs bmw 5 series lwb check full comparison here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X